மேயின் Brexit திட்டம் தோல்வி

UK

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே (Theresa May) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முன்வைத்த திட்டம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த திட்டத்துக்கு ஆதரவாக 202 வாக்குகளும், எதிராக 432 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் மேயின் அரசியல் தலைமையும் ஆபத்து நிலையில் உள்ளது.
.
மேயின் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தோருள் மே அணியை சார்ந்த 118 பேரும் அடங்குவர்.
.
இந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் நடாத்தப்பட இருந்தும், போதிய ஆதரவு இன்மையாலேயே இன்றுவரை பின்போடப்பட்டு இருந்தது.
.
Labour கட்சி Jeremy Corbyn உடனடியாக பிரதமர் மே மீது நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு ஒன்றுக்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு புதன்கிழமை இடம்பெறும். மேயின் கட்சியான DUP மேக்கு முழு ஆதரவை வழங்கவுள்ளது.
.
சுமார் 2.5 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தேர்தல் ஒன்று மூலம் தீர்மானித்து இருந்தது. ஆனால் பிரித்தானியாவில் பலரும் பின்னர் இந்த விடயத்தில் தமது கருத்தை மாற்றி உள்ளனர். தற்போது பிரித்தானியா வெளியேற்றத்துக்கான திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாது உள்ளது.
.
சில அரசியல்வாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு நிகழ்த்த கேட்டுள்ளார்.

.