மொசாட் உளவாளி Zygier கொலையா, தற்கொலையா?

ஆஸ்திரேலியா-இஸ்ரவேல் இரட்டை பிரசையான Ben Zygier 1990 ஆம் ஆண்டுகளில் இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்து, பின் மொசாட்டில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். ஆனால் இவர் 2010 ஆம் ஆண்டில் மொசாட்டால் கைது செய்யப்பட்டு Ayalon என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த சிறை இஸ்ரவேலின் தலைநகர் Tel Aviv  இற்கு அண்மையில் உள்ளது. 24 மணிநேர காவலில் இருந்த இவர் 2010 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மரணமானார். அப்போது இவரின் மரணம் தற்கொலை என பதியப்பட்டது. விசேட 24 மணிநேர காவலில் உள்ள கைதி தகொலை செய்வது எப்படி?

தற்போது இவரின் மரணம் புதிய விசாரணைகளை தூண்டி விட்டுள்ளது. இவர் மூலம் மொசாட் ஒரு உளவு வேலையை செய்ய இருந்தது. இவர் இத்தாலியில் ஒரு பொய் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் தொழில்நுட்ப உபகரணங்களை ஈரான் போன்ற எதிரி நாடுகளுக்கு விற்பனை செய்வது (பின் இவற்றை இஸ்ரவேலில் இருந்து கட்டுப்படுத்த?). அத்திட்டப்படி இவரும் இத்தாலியில் வேலை செய்ய விசாவிற்கு அனுமதி பத்திரம் சமர்ப்பித்திருந்தார். பின் இவர் இந்த உண்மைகளை எல்லாம் அவுஸ்ரேலிய உளவுப்படைக்கு கூறிவிட்டார். அதுவே அவர் செய்த குற்றம்.

உடனடியாக இவரை கைது செய்து, Prisoner X என பெயரிட்டு சிறையில் அடைத்தது மொசாட். ஆஸ்திரேலிய அரசு இதை அப்போது அறிந்திருந்தும் அவரை மீட்க நடவடிக்கை ஒன்றும் செய்திருக்கவில்லை. அது மட்டுமன்றி இச்செய்தி நீண்ட காலம் பல அரசுகளாலும் மறைக்கப்பட்டு வந்தது. அனால் இவ்விடயம் தற்போது பகிரங்கம் வந்துள்ள நிலையில் இஸ்ரவேல் இக்கொலையை விசாரணை செய்ய உள்ளது.