மோதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

Modi

2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மோதி அரசு 36 Rafale யுத்த விமானங்களை பிரான்ஸிடம் இருந்து $8.7 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவின் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.
.
இந்திய சட்டப்படி இவ்வகை கொள்வனவின் 30% இந்தியாவில் முதலீடு செய்யப்படல் அவசியம். அதன்படி இந்திய செயல்பாடுகளுக்கு மோதி தனது நண்பர் அனில் அம்பானியின் Reliance Group நிறுவனத்தை பலவந்தமாக புகுத்தி உள்ளார்  என்று தற்போது அறியப்படுகிறது. அத்துடன் இந்த கொள்வனவுக்கு, ஊழல் காரணமாக, இந்தியா மிகையான தொகையை செலுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Hollande நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டின் Mediapart என்ற ஊடகத்துக்கு தெரிவித்த கருத்தில், மோதியின் இந்திய அரசே இந்தியா தரப்பில் Reliance Group நிறுவனத்தை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
.
Reliance Group நிறுவனத்துக்கு யுத்த விமான அனுபவம் எதுவும் இல்லாத நிலையிலேயே Rafale யுத்த விமான பணி வழங்கப்படுள்ளது. ஆனால் இத்துறையில் நன்கு அனுபவம் கொண்ட இந்திய அரச அமைப்பான Hindustan Aeronautics னுக்கே இந்த பணி வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
.
அதே காலத்தில் Hollande யின் நண்பி Julie Gayet தயாரிக்கும்  திரைப்படம் ஒன்றில் Reliance முதிலீடு செய்தும் இருந்துள்ளது. அதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் Hollande.
.
அண்மையில் ஒரு கட்டிடமோ, மாணவரோ கொண்டிராத Jio University யை மோதி இந்தியாவின் Institutes of Eminence தரத்துக்கு உயர்த்தி, அரச மானியங்களை வழங்கி இருந்தார். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது Jio University.

.