யாழில் IPKF அடைந்த முன் தோல்விகள், காரணங்கள்

IPKF

யாழ் பல்கலைக்கழக வளாகத்துள் வானில் இருந்து இறங்கவும், தரையால் நுழையவும் முற்பட்ட IPKF படையினர் புலிகளின் முற்றுகையுள் உள்ள போது புகையிரத தண்டவாளம் வழியே தனது அணியை செலுத்தி, முற்றுகைக்குள் இருந்த IPKF படைகளை மீட்ட கேணல் Anil Kaul கடந்த புதன் (2017/12/27) மரணம் ஆகியிருந்தார். அவரின் நினைவாக Shekhar Gupta என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் உள்ள தரவுகள் பின்வருமாறு.
.
IPKF படையின் முதலாவது இழப்புக்கள் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் 5 இந்திய para-commando அணியினர் புலிகளால் கொலை செய்யப்பட்டு, tire போட்டு தீயிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையினர் புலிகள் தம்மை தாக்குவார் என்று எதிர்பார்த்து இருந்திருக்கவில்லை.
.
அனால் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைய முனைந்த இந்திய படையினரே பெரும் இழப்புக்களை சந்தித்து உள்ளனர். அதனால் முதல் ஒரு மாத காலத்துள் மட்டும் 350 IPKF படையினர் பலியாகியும், 1,100 படையினர் காயம் அடைந்தும் உள்ளனர்.
.
யாழ் வளாகம் நோக்கி சென்ற 30 உறுப்பினர்களை கொண்ட 13ஆம் சீக்கிய Light Infantry தவறான ஒரு விளையாட்டு மைதானத்தை அடைந்துள்ளதாம். இந்திய அரசியல்வாதியான நட்வர் சிங்கின் (Natwar Singh) உறவினரான மேஜர் Birendra Singh தலைமையில் தவறான மைதானத்தை அடைந்த 30 பேரில் 29 பேர் பலியாகி உள்ளனர். Sepoy Gora Singh என்பவர் மட்டும் புலிகளால் பிடிக்கப்பட்டு உள்ளார்.
.
வானில் இருந்து பல்கலைக்க வளாகத்தில் இறங்கிய படையினருள் 6 பேர் கொல்லப்பட்டும், 9 பேர் காயப்பட்டும் உள்ளனர். இவர்களை லெப். கேணல் Dalbir Singh என்ற அதிகாரி தம்மிடம் இருந்த மூன்று T-72 tanks உதவிகளுடன் காப்பாற்றி உள்ளார்.
.
பலாலிக்கும் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு இடையிலான வீதிகளும், வெளிகளும் புலிகளின் கண்ணிவெடிகளால் நிரம்பி உள்ள நிலையில் வளாக பகுதியில் சிக்கிய படையினரை காப்பற்ற IPKF தவித்து.
.
அப்போது பல வழிகளையும் பயன்படுத்த முனைந்த tank கட்டளை அதிகாரி கேணல் Anil Kaur, பல்கலைக்கழக வளாகம் அருகே செல்லும் புகையிரத தண்டவாளம் மட்டும் புலிகளின் கணக்கில் இல்லாது இருப்பதை அறிந்தார். உடனே தண்டவாளம் மீது தமது tank அணியை செலுத்தி, வளாக பகுதியில் அகப்படிருந்த IPKF படைகளை மீண்டுள்ளார். அப்போது புலிகளின் RPG தாக்குதல் ஒன்றில் அகப்பட்டு கண் ஒன்றையும் இழந்திருந்தார். இந்த மீட்பு காரணமாக இவர் இந்திய இராணுவத்தில் உயர் மதிப்பு பெற்றார்.
.
அக்டோபர் 17 ஆம் திகதி யாழை கைப்பற்ற 5 IPKF அணிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் யாழ் கோட்டையை நோக்கி சென்ற 41ஆம் அணி 272 படையினரை இழந்துள்ளது. மற்றை அணியான 72ஆம் அணியும் கேணல் D. S. Saraon உட்பட பலரை இழந்துள்ளது. இவர்களுடன் சென்ற 13.2 தொன் பாரம் கொண்ட கவச வாகனம் ஒன்று புலிகளின் கண்ணிவெடியுள் அகப்பட்டு சுமார் 30 ஆதி உயரத்துக்கு வீசப்பட்டதாம். மூன்றாம் அணியின் ஒரு மேஜர் ஒருவர் தவிர மற்றைய அனைவரும் கொல்லப்பட்டனராம்.
.
IPKF தரப்பு ஆரம்ப இழப்புகளுக்கு, அவர்கள் யுத்தத்தை எதிர்பாராமல் இருந்தமையை காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியா பலாலிக்கு T-72 வகை tanks, Mi-256 கெலிகள் என பல இராணுவ தளபாடங்களை தருவித்து இருந்தாலும் அவை தேவையான குண்டுகளை கொண்டிருக்கவில்லை. களத்தில் உள்ள படையினர் தம்பாட்டுக்கு யுத்தத்தை ஆரம்பிப்பதை தடுக்கும் நோக்கில் அரசுகள் இவ்வாறு குண்டுகளை களத்துக்கு உடனேயே அனுப்பாது தவிர்ப்பது உண்டு.
.
அத்துடன் பல IPKF படையினர் இந்தியாவில் இருந்து பலாலிக்கு வந்து சுமார் 3 மணித்தியாலங்களுள் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
.