யுத்தத்தை விரும்பும் எதிரியை அறியாத அமெரிக்கர்

UkraineSSI

Ukraine கலவரம், ரஷ்யா Crimea வை தனதாக்கல், மேற்கு நாடுகள் ரஷ்யாவுடன் முரண்படல் எல்லாம் உலகறிந்த அண்மைக்கால விடயங்கள். இந்த Ukraine விவகாரத்தில் அமெரிக்க மக்கள் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் இவ்விடயம் சார்ந்த கருத்துக்கள் திடமான அறிவை அடிப்படையாக கொண்டதா? இல்லை, என்கிறது அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற கருத்து கணிப்பு ஒன்று.

அமெரிக்காவின் Survey Sampling International நடாத்திய கருத்துக்கணிப்பின்படி ஆறில் ஒரு அமெரிக்கரே (1/6) Ukraine ஐ சரியாக உலக படத்தில் அடையாளம் காட்டியுள்ளார். மொத்தம் 2066 அமெரிக்கர் இந்த கணிப்பில் பங்குபற்றி இருந்துள்ளனர். அவர்களில் 7 பெயர் Ukraine ஐ அலாஸ்கா நீங்கலான அமெரிக்காவில் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர். பலர் Ukraine ஐ தென் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உள்ளதாக அடையாளம் காட்டியுள்ளனர். (இணைக்கப்பட்ட படத்தில் உள்ள புள்ளிகள் அவரவர் Ukraine ஐ உலக படத்தில் அடையாளம் காட்டிய இடங்கள்).

இங்கே கவலைக்குரிய விடயம் என்னவென்றால் Ukraine ஐ பற்றிய அறிவு குறைந்தோரே அமெரிக்க இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். Ukraine பற்றி நல்ல அறிவு உடையோர் யுத்தத்தை விரும்பவில்லை. அத்துடன் 77% பட்டதாரிகள் Ukraine ஐ சரியாக அடையாளம் காணவில்லையாம். (ஏனோ தெரியவில்லை’ யாழ்பாணத்து கல்விமான்கள் நினைவுக்கு வருகிறார்கள்).

இந்த கருத்து கணிப்பு 28/03/2014 முதல் 31/03/2014 வரை நடாத்தப்பட்டிருந்தது.

படம்: Washington Post – நன்றி.