ரம்பின் கடைசி விரட்டல் John Bolton

JohnBolton

ரம்பின் ஆட்சியில் இருந்து அவரது பாதுகாப்பு ஆலோசகர் John Bolton இன்று விரட்டப்பட்டு உள்ளார். ரம்பின் குறுகிய ஆட்சி காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த மூன்றாவது நபர் Bolton. இவருக்கு முன் Michael Flynn, HR McMasterஆகியோர் இந்த பதவியை கொண்டிருந்தவர்கள்.
.
ரம்புக்கும், Boltonனுக்கும் இடையில் பலத்த கொள்கை வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது. இறுதியான வேறுபாடு அண்மையில் முறிந்துபோன தலபானுடனான இரகசிய பேச்சு. ரம்ப் இந்த இரகசிய பேச்சை விரும்பினார், ஆனால் Bolton நிராகரித்தார்.
.
திங்கள் இரவு Bolton தான் பதவியை துறப்பதாக கூறியிருந்தாராம். நாளை செய்வாய் அது தொடர்பாக கதைப்போம் என்று கூறிய ரம்ப் இன்று செவ்வாய் தான் Boltonனை பதவியில் இருந்து விலக்கியதாக கூறியுள்ளார். ரம்பின் இந்த செயல் “அவராக விலகவில்லை, நான் தான் விலக்கினேன்: என்று பறைசாற்றலாக கருதப்படுகிறது.
.
தற்போது ரம்ப் ஆதவாளர்கள் Bolton மீது அவதூறுகளை வீச ஆரம்பித்து உள்ளனர்.
.