ரம்பின் கூட்டாளி Roger Stone கைது

RogerStone

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முக்கிய கூட்டாளி Roger Stone அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரம்பின் அணியின் தேர்தல் அலுவலகம் ரஷ்யாவுடன் இணைந்து தேர்தல் குளறுபடிகளில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே Stone கைது செய்யப்பட்டு உள்ளார்.
.
Robert Mueller என்பவர் தலைமையில் நடாத்தப்படும் Special Counsel investigation of Russian interference என்ற விசாரணை அமைப்பே Stone என்பவரை கைது செய்துள்ளது.
.
Stone கைது தொடர்பான ஆவணங்களில், Stone ரஷ்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக பெற்ற ஹில்லரி கிளிண்டனுக்கு எதிரான தரவுகளை Wikileaks அமைப்புக்கு வழங்கினார், விசாரணைகளின்போது சாட்சிகளை பொய் கூற கேட்டு கொண்டார் என்று பல குற்றங்கள் கூறப்பட்டு உள்ளன. Wikileaks நேரடியாக அடையாளம் காணப்படாது, Organization 1 என்றே கூறப்பட்டுள்ளது. Stone தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார்.
.
ரம்புக்கு நெருக்கமான Stone, ஆரம்பத்தில் ரம்பின் தேர்தல் பிரச்சார அலுவல்களில் முக்கிய பங்கு கொண்டிருந்தவர்.
.
இதுவரை ரம்புக்கு நெருக்கமான 34 பேர் ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டனர் என்று கூறி கைது செய்யப்பட்டும், அதில் பலர் குற்றவாளிகளாக காணப்பட்டும் உள்ளார். சிலர் தமது சிறை தண்டனைகளை தற்போதும் அனுபவித்து வருகினறனர்.
.
தற்போது குற்றம் சாட்டப்படாது மிகுதியாக உள்ளோர் ஜனாதிபதி ரம்பும், அவரின் மருமகன் குஷ்னருமே (Jared Kushner).
.