ரம்ப் தேர்தல் முடிவுவை மாற்ற சட்டவிரோத அழுத்தம்

ரம்ப் தேர்தல் முடிவுவை மாற்ற சட்டவிரோத அழுத்தம்

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ரம்ப் தோல்வி அடைந்து இருந்தாலும் தற்போதும் அவர் எவ்வாறாவது கணக்கு காட்டி தொடர்ந்தும் சனாதிபதியாக இருக்க முனைகிறார். அந்த நோக்கில் ஜோர்ஜியா (Georgia) மாநிலத்து அதிகாரிகளை 18 தடவைகள் தொலைபேசியில் அழைத்து அந்த மாநில தேர்தல் முடிவுகளை மாற்றவும் அழுத்தியுள்ளார் ரம்ப்.

ரம்ப் ஜோர்ஜியா மாநில செயலாளருக்கு (Secretary of State Brad Raffensperger) தொலைபேசி அழைப்பு செய்து அழுத்தியதை அந்த செயலாளர் ஒலிப்பதிவு செய்து பகிரகப்படுத்தி உள்ளார். இந்த ஆளுநர் ரம்பின் Republican கட்சியை சார்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஒலிப்பதிவின்படி செயலாளரிடம் எப்படியாவது தனக்கு ஆதரவான 11,780 வாக்குகளை தேடும்படி (“I just want to find 11,780 votes”) அழுத்தி உள்ளார் ரம்ப். (பைடென் சுமார் 12,000 வாக்குகளால் அந்த மாநிலத்தில் வென்று இருந்தார்)

ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த தொலைபேசி அழைப்பில் நீ மீண்டும் கணித்த முடிவு என்று கூறுவதில் தவறு இல்லை (“And there’s nothing wrong with saying that, you know, um, that you’ve recalculated”) என்றும் ரம்ப் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால் ஆளுநர் எண்ணியது சரி என்று கூறி ரம்பின் வாதத்தை நிராகரிக்கையில் ரம்ப், செயலாளர் “criminal consequences” களை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஒலிப்பதிவு பகிரங்கம் செய்யப்பட்டதால் செயலாளர் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ரம்ப்  தரப்பு கூறியுள்ளது. அதேவேளை Democratic கட்சி ரம்பின் அதிகாரிகள் மீதான சட்டவிரோத அழுத்தம் விசாரணை செய்யப்படல் வேண்டும் என்று கூறி வருகின்றது.

ஜோர்ஜியாவில் பல மீள் கணக்கெடுப்புகள் செய்யப்பட்டு அனைத்திலும் பைடென் வென்றது நிரூபிக்கப்பட்டு இருந்தது. ரம்ப்  தரப்பு பதிவு செய்த பல வழக்குகளும் ஆதாரம் இன்மையால் நிராகரிக்கப்பட்டு இருந்தன. ஜோர்ஜியாவின் 16 electoral வாக்குகளை பெற்றாலும் ரம்புக்கு சனாதிபதியாக போதிய வாக்குகள் கிடைக்காது.