ரஷ்யாவின் Zapad யுத்த பயிற்சியால் NATO விசனம்

Zapad

ரஷ்யாவும், பெலரூஸும் (Belarus) கடந்த வியாழன் முதல் Zapad 2017 என்ற யுத்த பயிற்சியில் (war game) ஈடுபட்டு உள்ளன. இதனால் விசனம் கொண்டுள்ளன NATO நாடுகள். இந்த யுத்த பயிற்சி வழமையாக இடம்பெறும் ஒன்று என்றாலும், இம்முறை இதை NATO சந்தேக கண்ணோடு பார்க்கிறது. (Zapad என்றால் West என்று அர்த்தம்).
.
இந்த யுத்த பயிற்சிகளை ரஷ்யா Lubenia, Vesbaria, Veishnoria ஆகிய பகுதிகளில் நடத்துகிறது. இந்த பகுதிகள் NATO நாடுகளான Poland, Lithuania, Latvia, Estonia ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டன. ரஷ்யாவின் Kaliningrad பகுதியும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.
.
ரஷ்யா இந்த பயிற்சிக்கு 12,700 படையினர், 70 யுத்த விமானங்கள், 250 tanks, 200 artillery, 10 யுத்த கப்பல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றுள்ளது. ஆனால் NATO  நாடுகள் அதை நம்பவில்லை. பதிலாக NATO நாடுகள் சுமார் 100,000 படையினர் Zapad 2017 பயிற்சியில் பங்கு கொண்டுள்ளதாக கூறுகின்றன.
.
ரஷ்யா, NATO உட்பட்ட சர்வதேச உடன்படிக்கை ஒன்றின்படி ஒருதரப்பு 13,000 இராணுவத்துக்கு மேலாக தொகையை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டால் மறுதரப்பை பார்வையாளராக அழைக்க வேண்டும். அவ்வாறு NATO அணியை பார்வையாளராக அழைக்க விரும்பாத நிலையிலேயே ரஷ்யா பங்கு கொள்ளும் இராணுவ தொகையை 12,700 என்று குறைத்து என்கிறது NATO.
.
இவ்வாறான பயிற்சி ஒன்றின் பின்னரே ரஷ்யா கிரைமியாவை ரஷ்யாவின் பாகம் ஆக்கியது.
.