ரஷ்யாவில் விழுந்த விண்கல் நிறை 570 kg

Meteor

இந்த வருடம் மாசி மாதம் பெரியதோர் விண்கல் ரஷ்யாவின் Chelyabinsk என்ற நகரின் அண்மையில் வீழ்ந்திருந்தது.இன்று புதன்கிழமை அந்த கல்லை Chebarkul வாவிக்கு அடியில் இருந்து மீட்டுள்ளனர்.

இந்த கல் வீழ்ந்தபோது பனிப்பாறை படர்ந்த வாவியின் மேற்பரப்பில் 20 அடி துளையை ஏற்படுத்தி இருந்தாலும் சுமார் 40 அடி ஆழத்தில் 8 அடி சதுப்புக்குள் புதைத்திருந்த இந்த கல்லை கண்டுபிடித்து எடுக்க 7 மாதங்கள் வரை எடுத்துள்ளது.

இதை வாவிக்கு வெளியே எடுக்கும்போது 3 துண்ட்டுகளாக உடைந்துள்ளது. இந்த 3 துண்டுகளினதும் மொத்த நிறை 570 kg (1250 இறாத்தல்) என கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சுமார் 100 வருடங்களுள் வீழ்ந்த விண்கல்களுள் இதுவே மிகப்பெரியது.

வான் வெளிக்குள் நுழைந்துவுடன் ஏற்படும் உராய்வு காரணமாக நிலமட்டத்தின் மேலே சுமார் 25 மைல்கள் வெடித்த இக்கல் வெடிக்க முன் சுமார் 10 முதல் 17 தொன் நிறையையும் 20 மீட்டர் விட்டத்தையும் கொண்டிருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பு ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டின் 20 மடங்குக்கு ஒப்பானது என நம்பப்படுகிறது.

இக்கல் வீழ்ந்தபோது சுமார் 1600 பெயர்வரை காயம் அடைந்திருந்தனர்.