ரோமர் காலத்தில் மாந்தை ஒரு பெரும் துறை

Mannar

ரோமர் (Roman Empire) காலத்தில், சுமார் 1500 வருடங்களின் முன், மன்னாரை அண்டியுள்ள மாந்தை பகுதி பெரியதோர் வர்த்தக துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று புதிய தொல்பொருள் ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் அக்காலத்தில் ரோமர், வணிக நோக்கங்களுடன், மாந்தை பகுதியில் தற்காலிக வதிவிடங்களையும் கொண்டிருந்திருக்கலாம் என்றும் இந்த ஆய்வுகள் கருதுகின்றன.
.
இலங்கை அகழ்வாய்வு திணைக்களத்துடன், University College Londonனின் ஆய்வாளர் Eleanor Kingwell-Banhamமும் இணைந்து செய்யும் ஆய்வுகளே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
.
யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு வேலைகள் மீண்டும் 2009 ஆம் ஆண்டின் பின் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
.
இப்பகுதி நிலங்களை தோண்டி ஆய்ந்த ஆய்வாளர் இங்கு உள்ளூர் அரிசி போன்ற தானியங்கள் மட்டுமன்றி, 600 ஆம் ஆண்டு முதல் 700 ஆம் ஆண்டு வரையான காலத்து black pepper, 900 ஆம் ஆண்டு முதல் – 1100 ஆம் ஆண்டு வரையான காலத்து கிராம்பு (clove) என்பனவும் இங்கு இருந்திருப்பதை கண்டறிந்து உள்ளனர்.
.
இங்கு காணப்பட்ட சில பொருட்கள் சுமார் 7,000 km தொலைவில் உள்ள இந்தோனேசியாவின் Maluku தீவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவை இங்கிருந்து பின் அராபிய, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம்.
.
அத்துடன் இங்கு 650 முதல் 800 ஆம் ஆண்டு காலத்திலான முந்திரிகை விதைகளும் காணப்பட்டுள்ளன. இந்த முந்திரிகை விதைகள் ரோமர்களினால் எடுத்துவரப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த தாவரங்களின் chemical isotopes களை ஆய்வதன் மூலமே ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை அடைந்துள்ளனர்.
.
உள்ளூரில் பயிரிடப்படாத wheat தானியமும் இங்கு காணப்படுள்ளது.

.