வடகிழக்கு அமெரிக்காவில் பெரும் Snow புயல்

Jonas

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி தற்போது Jonas என்று பெயரிப்பட்டுள்ள பெரும் Snow புயலில் சிக்கியுள்ளது. Snow விழும்போது அதிவேக காற்று வீசுமாயின் snow நிலத்தில் வீழ்வதற்கு பதிலாக புயல் போல் வீசும். அது பார்வை தூரத்தை சில அடிகளாக குறைத்துவிடும். இந்த snow புயல் பத்துக்கும் அதிகமான மாநிலங்களில் உள்ள 85 மில்லியன் மக்களை பாதிக்கிறது. இதுவரை 8 பேர் இப்புயல் காராணமாக பலியாகியும் உள்ளனர்.
.
இப்பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் இதுவரை 9,000 விமான சேவைகளை இரத்து செய்துள்ளன. Philadelphia, Baltimore, Washington DC போன்ற நகரங்கள் தமது பொது போக்குவரத்து சேவைகளை முற்றாக நிறுத்தியுள்ளன. New York நகரம் சனி பிற்பகல் 2:30 முதல் போக்குவரத்துக்களை முற்றாக தடை செய்துள்ளது. தடையின் போது வீதியில் செல்லும் தனியார் வாகன சாரதிகளை கைது செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
.
Kentucky மாநிலத்தில் உள்ள I-75 பெரும்சாலையில் அகப்பட்டுக்கொண்ட பல வாகனங்கள் சுமார் 12 மணித்தியாலங்கள் நகரமுடியாமல் இடர்ப்பட்டிருந்தனர். அதில் 35 மாணவர்களை கொண்ட பஸ் ஒன்றும் அடங்கும். இவ்வாறு நகரமுடியாமல் இருந்த வாகனங்கள் சுமார் 6 மைல் நீளத்துக்கு இருந்தது.
.
திங்கள் காலைவரை இந்நிலை தொடரலாம் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
.