வடகொரியாவின் அதிபர் கிம் எங்கே?

Kim_Yo_Jong

வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் (Kim Jong Un) எங்கே என்பதை அறியாத நிலையில் தற்போது உள்ளது உலகம். ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதிக்கு பின் கிம் பொது நிகழ்வுகளில் பங்கு கொண்டிருக்கவில்லை.
.
அதிவேளை சீனாவின் வைத்தியர் குழு ஒன்று வியாழக்கிழமை வடகொரியாவுக்கு பயணித்து உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
.
வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்பிடம் வடகொரிய கிம் தொடர்பாக கேள்விகள் கேட்ட பொழுது ரம்பும் அவ்வாறான செய்திகள் பொய் என்று கூறி இருந்தார்.
.
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற Day of the Sun என்ற வடகொரிய கொண்டாட்டத்தின் பொழுது கிம் காணப்படவில்லை. மேற்படி தினம் வடகொரியாவை உருவாக்கிய Kim Il Sung என்ற அவரின் பாட்டனாரை மகிமைப்படுத்தும் நாளாகும். அன்றில் இருந்தே உலகத்தின் கிம் மீதான சந்தேகம் ஆரம்பித்து இருந்தது.
.
வடகொரியாவை கண்காணிக்கும் 38 North என்ற அமைப்பின் செய்மதி புகைப்படம் கிம்மின் ரயில் அவரின் விடுமுறைகால மனைக்கு அண்மையில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ளதாக கூறுகிறது. ஏப்ரல் 21 திகதி அளவில் அங்கு சென்ற அந்த ரயில் தற்போதும் அங்கேயே உள்ளது. Wonsan என்ற இந்த இடம் தலைநகரில் இருந்து 230 km கிழக்கே உள்ளது.
.
கிம் இல்லாத நிலை ஒன்று ஏற்படுமாயின் 31 வயதுடைய அவரின் சகோதரி Kim Yo Jong பதவியை அடையலாம் என்றும் ஆய்வாளர்களை கருதுகிறார்கள். சகோதரனின் ஆட்சியிலும் சகோதரி பின்னணியில் முழுமையாக பங்கு கொண்டிருந்தவர்.
.
சுமார் 36 வயதுடைய கிம் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர். அவரின் பரம்பரை இருதய நோய்களுக்கும் ஆளாவது உண்டு. 2014 ஆம் ஆண்டிலும் கிம் சுமார் 6 கிழமைகள் வைத்திய காரணங்களால் காணாமல் இருந்தார். அவரின் எடை 130 kg (290 இறாத்தல்) ஆக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
.