வடகொரியாவுள் நுழைந்தார் ரம்ப்

Trump_Kim

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இன்று வடகொரியாவுள் நுழைந்துள்ளார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உள்ள இராணுவ தவிர்ப்பு பகுதிக்குள் (DMZ, demilitarized zone) நுழைந்த ரம்ப், வடகொரிய தலைவர் கிம்முடன் கைகுலுக்கி உரையாடினார்.
.
பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவுள் நுழைந்தது இதுவே முதல் தடவை. Jimmy Carter, Bill Clinton ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் பதவியில் இருந்து நீங்கிய பின் வடகொரியா சென்று இருந்தனர்.
.
ஜப்பானில் இடம்பெற்ற G20 அமர்வுக்கு சென்ற ரம்ப், பின்னர் தென்கொரியா சென்று இருந்தார். அத்துடன் DMZ பகுதிக்கு பயணிக்கும் திட்டமும் இருந்தது. அப்போது தான் கிம்மை DMZ பகுதியில் சந்திக்க விரும்புவதாகவும் வடகொரியாவுக்கு கூறி இருந்தார்.
.
கிம்மை சந்தித்தபோது, “உங்களை சந்திப்பது நல்லது” என்றும் “உங்களை இந்த இடத்தில் சந்திப்பதை நான் ஒருபோதும் எதிர்பார்த்து இருக்கவில்லை” என்று கூறினார் ரம்ப்.
.
சிங்கப்பூர், வியடனாம் ஆகிய இடங்களில் ரம்பும், கிம்மும் சந்தித்து இருந்தாலும் அந்த இரண்டு சந்திப்புகளும் எந்தவித பலனையும் அளித்திருக்கவில்லை. இன்றைய சந்திப்பு அவர்களின் மூன்றாவது சந்திப்பு.
.
இருபகுதிகளும் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளன.

.