வட, தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு

NorthKoreaTest

இன்று சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 3:00 மணிக்கு, தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in வடகொரியாவின் தலைவர் Kim Jong Unயுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு முன்னர் திட்டமிடப்படாத, அவசர சந்திப்பாகும். அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் சந்திப்பில் இருந்து பின்வாங்கியதனாலேயே இன்றைய மூன்-கிம் சந்திப்பு நிகழ்துள்ளது.
.
இன்றைய சந்திப்பில் இரண்டு தலைவர்களும் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் சந்திப்பு தொடர்பாகவே உரையாடி உள்ளனர். இந்த உரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.
.
இன்று Panmunjom என்ற வடக்கு-தெற்கு கொரியாக்களின் எல்லையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான கருத்துக்களை தென்கொரிய ஜனாதிபதி மூன் நாளை ஞாயிரு வெளியிடுவார்.
.
முன்னர் சிங்கப்பூர் சந்திப்பில் இருந்து பின்வாங்கிய ரம்ப் நேற்று வெள்ளி மாலை தனது கூற்றில் சிங்கப்பூர் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று மீண்டும் கூறியிருந்தார்.
.

வடகொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் சந்திப்பில் இருந்து முந்திக்கொண்டு பின்வாங்கலாம் என்றும், அது தனக்கு அவமானம் ஆகலாம் என்றும் கருதியே ரம்ப் முந்திக்கொண்டு பின்வாங்கியதாக பலராலும் கருதப்படுகிறது.
.