வன்கூவரில் சட்டவிரோத சீன வங்கியாளர் கொலை

வன்கூவரில் சட்டவிரோத சீன வங்கியாளர் கொலை

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் Jian Jun Zhu என்ற சட்டவிரோத வாங்கியாளர் வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணியளவில் உணவகம் ஒன்றில் வைத்து அடையாளம் அறியப்படாத துப்பாக்கிதாரரால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இவருடன் இருந்த Paul King Jin என்பவர் காயமடைந்து உள்ளார்.

மரணித்த Zhu சீனாவுக்கும், கனடாவுக்கு இடையில் சட்டவிரோத வங்கி சேவை செய்பவர். இவரின் Silver International என்ற சட்டவிரோத வங்கி ஆண்டு ஒன்றில் சுமார் C$220 மில்லியன் (U$165 மில்லியன்) பெறுமதியான பணமாற்றுக்களை செய்வதாக கனடாவின் போலீசார் கூறுகின்றனர்.

Zhu வுக்கு எதிரான கனடாவின் அரைகுறை வழக்கு ஒன்று 2018 ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்திருந்தது. மரணித்தவரின் அடையாளத்தை Vancouver Sun பத்திரிகையே வெளியிட்டு அடையாளம் காட்டி உள்ளது, கனடாவின் போலீசார் அல்ல.

2015 ஆம் ஆண்டு Zhu வின் அலுவலகத்தை முற்றுகை இட்ட போலீசார் C$2 மில்லியன் பண தாள்கள் இருந்ததை கண்டுள்ளனர். அந்த தாள்கள் பலவற்றில் போதை எச்சங்கள் (residue) இருந்துள்ளன. அதனால் சில தாள்களை போதை விற்பனையாளர் கையாண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காயமடைந்த Jin என்பவரின் வீட்டை ஒருமுறை முற்றுகை செய்த போலீசார் C$4.8 மில்லியன் காசு இருந்ததை கண்டுள்ளனர்.

மேற்படி இருவரும் வான்கூவர் பகுதி casino களுக்கு செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது. 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இவர்கள் 140 மாற்றுக்கள் மூலம் C$23 மில்லியன் பணத்தை casino களில் பயன்படுத்தி உள்ளனர் என்றும் போலீஸ் கூறுகிறது.