வளரும் உலக ஆயுத விற்பனை

Sipri

2005 முதல் 2009 ஆண்டு வரையான காலத்துடன் ஒப்பிடும் போது 2010 முதல் 2014 ஆண்டு வரையான காலத்தில் உலக ஆயுத விற்பனை 16% ஆல் அதிகரித்துள்ளதாக SIPRI (Stockholm International Peace Research Institute) தெரிவித்துள்ளது.
.
உலகின் அதி கூடிய ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான அமெரிக்காவின் ஆயுத விற்பனை (உலக ஆயுத விற்பனையின் 31%) இந்த காலப்பகுதியில் 23% ஆல் அதிகரித்துள்ளது. இரண்டாவது அதிக ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான ரஷ்யாவின் விற்பனை (உலக ஆயுத விற்பனையின் 27%) இந்த காலப்பகுதியில் 31% ஆல் அதிகரித்துள்ளது. சீனாவின் ஆயுத விற்பனை இந்த காலப்பகுதில் 143% ஆல் அதிகரித்துள்ளது.
.
உலகின் முதல் 5 ஆயுத கொள்வனவாளர்களாக இந்தியா (உலக ஆயுத கொள்வனவின் 15%), சீனா (5%), பாகிஸ்தான் (4%), தென்கொரிய (3%), சிங்கப்பூர் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.
.
சவூதி அராபியாவின் ஆயுத கொள்வனவு மேல்குறிப்பிட்ட காலத்தில் 400% ஆல் அதிகரித்துக்கது.

.