விமானத்தில் வழங்கிய அப்பிள், தண்டம் $500

DeltaAirlines

அமெரிக்காவுள் எடுத்துவரப்படும் பல பொருட்களுக்கு பெரும் தடைகள் உண்டு. அவற்றுள் சில பொருட்கள் தடுத்துவைப்பின் பின் உரிமையாளரிடம் விடுவிக்கப்படும், ஏனையவை அழிக்கப்படும். உயிரினங்கள், தாவரங்கள், இறைச்சி, முட்டை, மரங்கள் என பல பொருட்கள் இந்த தடைக்குள் அடங்கும். இவ்வகை பொருட்கள் அனைத்தையும் declare செய்வது அவசியம்.
.
அண்மையில் Crystal Tadlock என்ற அமெரிக்க பெண் பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து Delta Airlines விமானம் மூலம் அமெரிக்கா திரும்பியுள்ளார். அந்த பயணத்தின்போது உண்பதற்காக Delta விமானம் மேற்படி பயணிக்கு ஒரு அப்பிளை (Apple) வழங்கி உள்ளது. அந்த பயணி வழங்கப்பட்ட அப்பிளை உண்ணவில்லை.
.
மேற்படி பெண் Denver நகரில் வசிப்பவர். இவரின் பாரிஸ் நகரில் இருந்தன பயணம் முதலில் Minneapolis நகர் சென்று, பின் வேறொரு விமானத்தில் Denver விமான நிலையத்தில் முடியவிருந்தது. உண்ணாத அப்பிளை மேற்படி பயணி Minneapolis-Denver விமானத்தில் உண்ண வைத்திருந்துள்ளார்.
.
தன்னினடம் ஒரு அப்பிள் இருப்பதை அவர் Minneapolis விமான நிலையத்தில் declare செய்யவில்லை. வெளிநாடு ஒன்றில் இருந்து வரும் இவருக்கு port-of-entry Minneapolis என்பதால் அவர் தன்னிடம் இருந்த அப்பிளை Minneapolis விமான நிலையத்தில் declare செய்து இருந்திருத்தல் வேண்டும்.
.
Declare செய்யாத இந்த அப்பிளை சுங்க அதிகாரிகள் கண்டுள்ளார்கள். உடனே இவருக்கு $500 தண்டம் விதிக்கப்படுள்ளது.
.
அத்துடன் இவரின் Global Entry சலுகையும் பறிக்கப்படுள்ளது. அதிகமா பயணம் செய்வோர்க்கு (frequent flyers) அமெரிக்கா Global Entry சலுகையை வழங்குவதுண்டு. இந்த சலுகை உள்ளோர் வழமையான பயணிகள் வரிசையில் காத்திராது, விசேட வழிகள் மூலம் விரைவாக பயணத்தை தொடர முடியும்.

.