விமானம் தாங்கி தயாரிப்புகளை சீனா நிறுத்தம்

Catapult

தனது 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கி கப்பல் தயாரிப்பு வேலைகளை சீனா இடைநிறுத்தி உள்ளது. புதிய தொழிநுட்பங்களை கொண்டதாக அந்த கப்பல்களை கட்டும் பணிகளில் ஏற்படுள்ள இடர்பாடுகள் தயாரிப்பு வேலைகளை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது.
.
சீனா முதலில் சோவியத் கைவிட்ட விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்து, புதிதாய் மெருகூட்டி தனது முதலாவது (Type 001) விமானம்தாங்கியை தயாரித்தது. இது தற்போது சேவையில் உள்ளது.
.
முதலாம் விமானம் தாங்கி கட்டுமானத்தில் பெற்ற அறிவை கொண்டு, சற்று பெரிய ஆனால் முதலாம் விமானம் தங்கியின் அமைப்பை கொண்ட இரண்டாம் (Type 002) விமானம் தாங்கியை தயாரித்தது. அது 2017 ஆம் ஆண்டு முதல் பரிசோதிப்பு ஓட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
.
சீனாவின் முதல் இரண்டு விமானம் தாங்களும் ski jump ஓடு பாதைகளை கொண்டவை. போதிய இடவசதி இல்லாமையால் விமானம் தாங்கிகளில் ஒடுபாதை நீளம் குறைந்தவை. அவை யுத்த விமானங்கள் சாதாரண முறையில் ஓடி எற போதியன அல்ல. அதனால் விமானங்கள் வேறு வழிகளால் வேகமாக முன் தள்ளி ஏற்றப்படும். Ski jump கொண்ட விமானம் தாங்கிகளில் ஓடுபாதையின் முடிவு மேல்நோக்கி இருக்கும். அது யுத்த விமானம் விரைவில் மேல் நோக்கி செல்ல உதவும்.
.
SkiJump
.
சீனாவின் 3 ஆம் மற்றும் 4 ஆம் விமானம்தாங்களின் (Type 003) கட்டுமான வேலைகள் தற்போது நடைபெறு வருகின்றன. இவற்றின் வடிவமைப்புகள் முற்றிலும் சீனாவின் கைவண்ணம்.
.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தாங்கிகள் catapult கருவி மூலம் யுத்த விமானங்களை வேகமாக மேலே தள்ளும். பொதுவாக நீராவியை பயன்படுத்தும் ஓடுபாதையின் கீழே உள்ள கருவி இம்முறைக்கு பயன்படுத்தப்படும். இதுவே தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் முறை.
.
சீனாவின் 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கிகள் நீராவிக்கு பதிலாக மின்காந்த (electromagnetic launch system) பயன்பாட்டின் மூலம் இயங்கும் கருவிகளை பயன்படுத்தி விமானங்களை தள்ளி ஏவ திட்டமிடப்பட்டு இருந்தன. அனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை கையாள்வது இலகுவாக அமையவில்லை. அந்த முறையை மேலும் மெருகூட்ட அல்லது வேறு வழிகளை பயன்படுத்த சீனா முனையலாம்.
.
அத்துடன் விமானம் தங்களை தயாரிக்கும்போது அவற்றில் பயன்படுத்தப்படவுள்ள யுத்த விமானங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். சீனா சில புதிய, தரமான யுத்த விமானங்களை தயாரிப்பதால் புதிய விமானம் தாங்கிகள் அவ்வகை விமானங்களை காவக்கூடியதாக அமைத்தல் அவசியம்.
.
அமெரிக்காவின் இரண்டு Gerald Ford வகை விமானம் தாங்கி கப்பல்கள் electromagnetic launch system வகை ஏவல் கருவியை கொண்டவை. அவையும் பல இடர்களில் உள்ளன. அவை பயன்பாட்டில், திருத்த வேலைகளில் எதிர்பார்த்த பயனை வழங்கவில்லை. அமெரிக்கா மின்காந்த ஏவல் முறையில் அடைந்த பின்னடைவுகளும் சீனா தனது வேலைகளை கைவிட காரணமாக அமைத்திருக்கலாம்.
.
மேலும் சீனா தனது ஏவுகணைகளினதும், ஆளில்லா யுத்த விமானங்களினதும் தரங்களை  உயர்த்தி வருவதால், எதிர்காலத்தில் விமானம் தாங்கிகளின் பயன்பாடு குறவு என்றும் சீனா கருதி இருக்கலாம்.
.