வெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள்

மற்றைய நாடுகள் உளவு வேலை செய்வதாக அழும் அமெரிக்கா தன் பங்குக்கு மிகப்பெரிய அளவில் உளவு வேலைகள் செய்து வந்துள்ளது. PRISM (2007) என்ற பெயரில் அமெரிக்காவினால் உலகளாவிய செய்யப்பட்டு வந்த உளவு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் FISA (Foreign Intelligence Surveillance Act) சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த உளவு வேலை Google, Yahoo, Facebook, Microsoft, Skype போன்ற பெரிய நிறுவங்களிடம் emails, photos, chat போன்ற எல்லாவற்றினதும் பிரதியை பெற்று வந்துள்ளது.

FISA சட்டப்படி இவ்வாறு அமெரிக்க அரசு தகவல்கள் சேகரிப்பதை தகவல்களை கொடுக்கும் நிறுவனக்கள் அவ்வாறு செய்வதை பகிரங்கப்படுத்தவும் கூடாது. அவ்வாறு பகிரங்கப்படுத்துவது சட்டத்துக்கு முரண்.

ஆனால் இப்போ இந்த உளவு வெளிச்சத்துக்கு வந்ததால், Google, Facebook, Microsoft போன்ற நிறுவங்கள் இந்த உளவு சம்பந்தமாக மேலதிக குறிப்புகளை வெளியிட அரசின் அனுமதியை கேட்கின்றன.

அதேவேளை அமெரிக்காவின் NSA (National Security Agency) முன்னாள் ஊழியரான Edward Snowden பத்திரிகை ஒன்றுக்கு கூறிய கருத்துப்படி NSA 61,000 தடவைகளுக்கும் அதிகமாக உலக அளவில் கணனிகள் மூலமான திருட்டுக்களை (hacking) செய்துள்ளது. இந்த திருட்டுக்கு சீனா, Hong Kong போன்ற இடங்களில் உள்ள அரச மற்றும் தனியார் கணணிகளும் அடங்கும். Snowden தற்போது Hong Kongகில் உள்ளார். அமெரிக்காவில் அவருக்கு எதிராக பல பாரதூரமான வழக்குகள் காத்திருக்கின்றன.