வைத்திய உபகரணங்களை பெற சீனா செல்லும் Air India

AirIndia
இந்தியாவின் Air India விமானம் ஒன்று ஞாயிறு காலை (ஏப்ரல் 5 ஆம் திகதி) சீனாவுக்கு செல்கிறது. இந்த விமானம் சீனாவில் இருந்து கொரோனா தொற்றை பரிசோதிக்கும் வைத்திய உபகாரங்களை (rapid test kits) இந்தியாவுக்கு எடுத்துவரும்.
.
Indian Council for Medical Research (ICMR) என்ற இந்திய அமைப்பு 10 இலச்சம் இவ்வகை கொரோனா பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது. ஒரு நாட்டில் எவ்வளவு பேர் கொரோனா தொற்றி உள்ளார்கள் என்பது அந்த நாட்டில் எவ்வளவு பேர் கொரோனாவுக்கான பரிசோதனையை செய்துள்ளார்கள் என்பதிலேயே தங்கி உள்ளது.
.
வழமையாக இவ்வகை பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் RT-PCR உபகாரணங்களுடன் ஒப்பிடுகையில் இந்த rapid test kits இலகுவானவை.
.
இவ்வாறு சீனாவில் இருந்து மேலும் கொரோனா பரிசோதனை உபகரணங்களை எடுத்துவர Air India விமான சேவை  5 ஆம், 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு உரிமை பெற்றுள்ளது.
.
அதேவேளை 1,100 ventilators அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்துக்கு வருகிறது என்று அந்த மாநிலத்து கவர்னர் Cuomo கூறி உள்ளார். அமெரிக்காவில் மிக பாதிக்கப்பட்ட நகரம் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள நியூ யார்க் நகரமே.
.