ஹாங் காங்கில் 5 மாதங்களாக தொடரும் வன்முறை

HongKong

ஹாங் காங் நகரில் சுமார் 5 மாதங்களுக்கு முன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது வன்முறைகளாக மாறி உள்ளன. கடைகள் எரிப்பு, வீதிமறிப்பு, ரயில் எரிப்பு, கலகம் போன்ற பல வகை வன்முறைகளும் ஆர்பாட்டக்காரர்களால் கையாளப்படுகின்றன.
.
சீனா இதுவரை தலையிடாத நிலையில் ஹாங் காங் போலீசார் மட்டுமே இதுவரை கலகங்களை அடக்க முனைந்து வருகின்றனர்.
.
கடந்த 5 மாத காலங்களில் சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,756 கண்ணீர்ப்புகை குண்டு, 1,312 rubber bullets ஆகியன பயன்படுத்தப்பட்டதாக ஹாங் காங் போலீசார் கூறி உள்ளனர். செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்படடோர் தொகை 142 என்று கூறப்படுகிறது.
.
வன்முறைகள் இடம்பெறும் இடங்களில் உள்ள 250 வங்கி கிளைகளும் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 70 பஸ் சேவைகளும் முடங்கி உள்ளன.
.
சந்தேக நபர்களை சீனாவுக்கு அனுப்ப வழிசெய்யும் சட்டம் ஒன்றை ஹாங் காங் நடைமுறை செய்ய முனைந்த போதே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி இருந்தன. அந்த சட்டம் உடனடியாக கைவிடப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் ஆகியுள்ளன.
.