​இந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை

Modi

இந்தையாவின் பிரதமர் மோதி அந்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியெடுக்கும் நோக்கில், இரண்டு வருடங்களின் முன், திடீரென பழைய நாணய தாள்களை தடை செய்து, புதிய தாள்களை வெளியிட்டார். நேற்று புதன் இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India) விடுத்துள்ள அறிவிப்பின்படி பாவைனையில் இருந்த 99.3% (சுமார் 15.3 டிரில்லியன் ரூபாய்) பழைய நாணயங்கள் மீண்டும் தம்மிடம் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கருப்பு பணம் எதுவும் இதுவரை அரசின் கையில் சிக்கவில்லை.
.
நல்நோக்கம் கொண்ட இந்த முயற்சி தோல்வி அடைந்தற்கு பல காரணங்கள் உண்டு என்று கருதப்படுகிறது. அரசு இந்த முயற்சியை நடைமுறை செய்யும்வரை இரகசியமாக வைத்திருந்தாலும், விடயம் பரவலாக கசிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் கருப்பு பணம் தாள்களாக அன்றி தங்கம் போன்ற சொத்துக்களில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.சிலர் தம்மிடம் இருந்த கருப்பு பணங்களை குறைந்த விளக்கு வறியவர்களுக்கு விற்பனை செய்து, அவர்கள் மூலம் வங்கிகளுக்கு வழங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
.
2016 ஆன் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறை செய்யப்பட்ட இந்த முயற்சி, சரியான திட்டமிடல் இன்றிய காரணத்தால், நாணயமான பலரையும் பாதித்து, பொருளாதாரத்தையும் பாதித்து இருந்தது. அப்போது அங்கு அகப்பட்டுக்கொண்ட உல்லாச பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
.
அக்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்திருந்தாலும், நாணய குழப்பித்தினால் வளர்ச்சி 5.7% ஆக குறைந்து இருந்தது.
.
இந்தியாவில் சுமார் 90% கொள்வனவுகள் காசை பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மிகுதி 10% மட்டுமே காசோலை, credit card போன்ற காசற்ற கொள்வனவுகளாக உள்ளன.

.