​ரம்ப் மீது FBI விசாரணை?

Trump

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் மீது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான FBI விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சில அமெரிக்க பத்திரிகைகள் கூறுகின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராகவும், எதிரி நாடான ரஷ்யாவின் நலனுக்கு ஆதரவாகவும் ரம்ப் செயல்பட்டுள்ளார் என்று கூறியே இந்த விசாரணை ஆராம்பிக்கப்பட்டுள்ளது.
.
கடந்த வெள்ளிக்கிழமை ​The New York Times பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. பின்னர் Washington Post பத்திரிகையும் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.
.
இது தொடர்பாக அமெரிக்காவின் Fox News செய்தி சேவை ரம்பிடம் கேட்டபோது, ரம்ப்  ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று திடமான பதில் ஒன்றை வழங்காது, FBI தன்னை விசாரிப்பது தனக்கு வழங்கப்படும் மிகப்பெரிய இழுக்கு என்று கூறி உளார்.
.
ரஷ்ய விடயம் தொடர்பாக ரம்பை விசாரணை செய்ய முனைந்த முன்னாள் FBI director James Comey என்பவரை ரம்ப் பதவியில் இருந்து விலக்கி இருந்தார்.
.
2017 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உடனான சந்திப்பின் பின்னர் அந்த சந்திப்புக்கு உதவிய மொழிபெயர்பாளரின் குறிப்புக்களை ரம்ப் மீள பெற்று, அத்துடன் மொழிபெயர்பாளரை இது தொடர்பாக கருத்துக்களை யாருக்கும் கூறவேண்டாம் என்றும் கூறியதாக Washington Post கூறியுள்ளது.

.