​ரஷ்ய, துருக்கி, ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தை

Syria

ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின், துருக்கியின் ​ஜனாதிபதி Recep Tayyip Erdogan, ஈரானின் ஜனாதிபதி Hassan Rouhani ஆகியோர் இன்று ஈரானின் தலைநகர் தெகிரானில் கூடி சிரியா யுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளனர்.
.
எஞ்சியுள்ள முரண்பாடுகளுக்கு இராணுவ யுத்தம் தீர்வல்ல என்று மூன்று தரப்பும் கூறினாலும், ரஷ்யாவும், ஈரானும் ஆயுத குழுக்களிடம் இருந்து இட்லிப் (Idlib) பகுதி மீட்கப்படல் வேண்டும் என்றுள்ளன. ஆனால் துருக்கி கட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கைகளை மட்டும் நாடுகிறது. துருக்கி தனது ஆதரவு கொண்ட குழுக்களை தவிர்த்து ஏனைய குழுக்கள் மீது மட்டும் தாக்குதல் நடைபெற விரும்புகிறது.
.
அதேவேளை ரஷ்யா அமெரிக்காவையும் இரண்டு தடவைகள் எச்சரித்து உள்ளது. IS குழுக்களை அழிக்க தென்சிரியாவின் At Tanf பகுயில் தங்கியுள்ள சிறுதொகை அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு குழுக்கள் மீதும் குறிவைத்து (precision weapons) தாக்கப்படும் என்றுள்ளது ரஷ்யா. தம்மீது தாக்குதல் செய்யப்பட்டால் தாமும் திருப்பி தாக்குவோம் என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.
.
இட்லிப் பகுதியில் பல்வேறு குழுக்களை சார்ந்த 30,000 ஆயுததாரர் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மத்தியில் சுமார் 3 மில்லியன் மக்களும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் வேறு இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக இட்லிப் இடம்பெயர்ந்தவர்கள்.

.