​ மோதி வீழ்ச்சி, மாட்டமைச்சர் தோல்வி

Modi

அண்மையில் நடைபெற்ற இந்திய மாநில தேர்தல்களில் மோதியின் பா.ஜ. கட்சி பலத்த தோல்வியை அடைந்துள்ளது. குறிப்பாக பா.ஜ. கட்சி ஆளுமை கொண்டிருந்த மாநிலங்களில் மோதியின் ஆளுமை அழிந்து உள்ளதால், 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது.
.
ராஜஸ்தான் (Rajasthan), மத்திய பிரதேசம் (Madhya Pradesh), சடீஷ்ஹார் (Chhattisgarh), மிசோரம் (Mosoram), தெலங்கானா (Telangana) ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் இடம்பெற்றன. அதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சடீஷ்ஹார் ஆகிய 3 மாநிலங்களையும் பா.ஜ. கட்சி இழந்துள்ளது.
.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய அரசுக்கான தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சடீஷ்ஹார் ஆகிய 3 மாநிலங்களில் இருந்த 65 ஆசனங்களில் 62 ஆசங்களை பா.ஜ. கட்சி வென்றிருந்தது. அந்தவகை ஆதரவு தற்போது பா.ஜ. கட்சிக்கு இல்லை என்று தெரிகிறது.
.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக மாட்டு அமைச்சராக (cow minister) இருந்த Otaram Dewasi என்ற பா.ஜ. அமைச்சரும் தோல்வி அடைந்துள்ளார். கைவிடப்பட்ட மாடுகளை பாதுகாப்பதே இந்த அமைச்சரின் தொழில். இவருடன் சந்தோச அமைச்சரும் (happiness minister) தோல்வி அடைந்துள்ளார்.
.