​$95 ஊதியத்தை மறுக்கும் பங்களாதேஷ் ஊழியர்

Bangladesh

பங்களாதேஷ் ஆடை உற்பத்தி ஊழியருக்கு மாதம் 8,000 உள்ளூர் நாணயமான ராக்கா (சுமார் $95) வழங்க எடுத்துக்கொண்ட முடிவை அந்நாட்டு ஆடை உற்பத்தி சங்கம் நிராகரித்து உள்ளது. பதிலாக மாதம் 16,000 ராக்கா ($190) ஊதியமாக வழங்கப்படல் வேண்டும் என்கிறது ஆடை உற்பத்தி ஊழியர் சங்கம்.
.
2013 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஒரு ஆடை உற்பத்தி நிலைய தீ விபத்துக்கு 1,130 ஊழியர்கள் பலியாகி இருந்தனர். அப்போது நடைமுறை செய்யப்பட்ட சம்பள தொகையான மாதம் 5,300 ராக்கா ($63) இப்போதும் ஆடை உற்பத்தி ஊழியருக்கு வழங்கப்படுகிறது.
.
பங்களாதேஷின் 80% ஏற்றுமதி வருமானம் ஆடை ஏற்றுமதி மூலம் கிடைகிறது. ஆடை தயாரிப்பு அங்கு சுமார் 40 மில்லியன் வேலைவாய்ப்பை கொண்டுள்ளது.
.
பங்களாதேஷில் உள்ள சுமார் 4,500 ஆடை உற்பத்தி தொழில்சாலைகள் சுமார் $30 பில்லியன் பெறுமதியான ஆடைகளை உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கிறது. H&M, Gap, Walmart, Tesco ஆகிய பல விற்பனை நிலையங்கள் இங்கிருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன.
.