$150 மில்லியன் போதை கடத்திய ஒலிம்பிக் வீரர்

$150 மில்லியன் போதை கடத்திய ஒலிம்பிக் வீரர்

Nathan Baggaley (வயது 45) என்ற அஸ்ரேலிய kayak ஒலிம்பிக் வீரரும் அவரின் சகோதரனும் (Dru Baggaley, வயது 39) $150 மில்லியன் பெறுமதியான, 650 kg எடை கொண்ட cocaine போதை கடத்திய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இரண்டு தடவைகள் ஒலிம்பிக்கில் silver பதக்கம் வென்ற Nathan கொள்வனவு செய்த வள்ளமே இந்த போதை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கைது 2018ம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது ஒலிம்பிக் வீரனின் சகோதரனும், Anthony Draper என்பவருமே கைது செய்யப்பட்டு இருந்தனர். ஒலிம்பிக் வீரனின் தொடர்பு பின்னரே தெரிய வந்தது.

ஒலிம்பிக் வீரனின் வள்ளத்தில் இருந்த செய்மதி ஊடான தொலைபேசியும் ஒலிம்பிக் வீரர் கொள்வனவு செய்ததே.

இந்த கடத்தலுக்கு சகோதரனும் மற்றையவரும் 11 மணித்தியாலங்கள் கடலில் பயணித்து போதையுடன் வந்த கப்பலை சந்தித்து உள்ளனர். இவர்களின் பயணத்தை அறிந்த அஸ்ரேலிய விமான மற்றும் கடல் படைகள் இவர்களை பின்தொடர்ந்து கைது செய்துள்ளனர்.