1MDB ஊழலை பகிரங்கப்படுத்தியவர் சுவிஸ் தப்பினார்

1MDB

மலேசியாவில் 1MDB (1 Malaysia Development Berhad) என்ற முதலீட்டில் இடம்பெற்ற ஊழல் உண்மைகளை பகிரங்கப்படுத்திய Xavier Justo மலேசியாவில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளார். சுவிஸின் தலைநகர் ஜெனீவா சென்ற பின்னரே இவர் தனது மலேசிய நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். இவருடன் இவரது மனைவியும், மகனும் கூடவே தப்பி உள்ளனர்.
.
இவர் முன்னர் சவுதியை தளமாக கொண்ட PetroSaudi என்ற எண்ணெய்வள நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றியவர். PetroSaudi நிறுவனத்துக்கும், 1MDB முதலீட்டுக்கும் தொடர்பு இருந்தது.
.
2015 ஆம் ஆண்டு Justo தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டுவரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தன்னை வற்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக Justo கூறியுள்ளார். விடுதலையான Justo சுவிஸ் சென்று பின் மலேசியா திரும்பி இருந்தார்.
.
அதேவேளை Pascal Najadi என்பவரும் வெளிநாட்டில் பாதுகாப்பு தேடியுள்ளார். இவரின் தந்தையார் Hussain Najadi 2013 ஆம் ஆண்டு மலேசியாவில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். ஈரானில் பிறந்த தந்தையார் Bahrain நாட்டில் வாழ்ந்து பின் மலேசியா சென்று வாழ்ந்தார். 1975 ஆம் ஆண்டில் தந்தையார் Arab Malaysian Development Bank (AMBank) என்ற வங்கியை ஆரம்பித்து இருந்தார். இந்த வங்கியின் உதவியுடன் Malaysian Airlines தனது முதலாவது நீண்டதூர பயணத்துக்கான DC-10 விமானத்தை கொள்வனவு செய்திருந்தது. தந்தையாரின் படுகொலையின் பின் 2014 ஆம் ஆண்டில் மகன் தனது குடும்பத்துடன் சுவிஸ் சென்றிருந்தார்.
.
2018 ஆம் ஆண்டு மே மாத தேர்தலில் அப்போதைய பிரதமர் Najib Razak (UMNO கட்சி) 1MDB ஊழல் காரணமாக விரட்டப்பட்டு, ஓய்வில் இருந்த முன்னாள் பிரதமர் Mahathir Mohamad (முன்னாள் UMNO கட்சியினர்) மீண்டும் Pakatan Harpan கட்சி சார்பில் பிரதமர் ஆனார். பதவிக்கு வந்த Mahathir விசாரணைகளை மீண்டும் வலிமைப்படுத்தினார்.
.
ஆனால் PPBM கட்சியை சார்ந்த Muhyiddin Yassin என்பவர் தனது பழைய UMNO கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த மாதம், மார்ச் 1 ஆம் திகதி, பிரதமர் பதவியை கைப்பற்றி இருந்தார்.
.
அதனால் ஊழலை விசாரணை செய்வோருக்கு மீண்டும் ஆபத்து நேர்ந்தது.
.