2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே

AusSalvation

சுமார் 2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே வாழ்வதாக பொதுநல சேவை இயக்கமான Salvation Army தெரிவித்துள்ளது. வறுமைப்பட்டோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவி வழங்குவது Salvation Armyயின் சேவைகளில் ஒன்றாகும். இந்த கணிப்பு 25 வயது முதல் 59 வயது வரையான 2400 ஆஸ்திரேலியர்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டதாகும்.
.
ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை 23 மில்லியன் ஆகும். அதாவது 10% க்கும் அதிகமானோர் அங்கு வறுமைகோட்டின் கீழ் வாழ்கிறார்கள்.
.

இவ்வாறு வறுமையில் வாழ்வோர் குடியிருப்பு தொகையை செலுத்தியபின் நாள் ஒன்றுக்கு A$ 18.00 (சுமார் U$ 14.00) ஐ மட்டுமே உணவு உட்பட ஏனைய அனைத்து செலவுகளுக்கும் கொண்டுள்ளார்கள்.