கேள்விக்குறியாகும் அங் சன் சு கியின் அரசியல் எதிர்காலம்

பர்மா என்று முற்காலங்களில் அழைக்கப்பட்ட மயன்மாரின் முக்கிய அரசில் பிரமுகரான அங் சன் சு கியின் (Aung San Suu Kyi) அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியில் உள்ளது. மேற்கு நாடுகளின் பலத்த ஆதரவுடன் பர்மாவின் அடுத்த தலைவராக இவர் தெரிவு செய்யப்படலாம் என்று அண்மைவரை கருதப்பட்டு வந்தது. அனால் இந்தக்கிழமை உறுதிப்படுத்தப்பட சட்டம் ஒன்று Suu Kyi அந்நாட்டின் தலைவர் ஆவதை தடுக்கின்றது. பர்மாவின் நீண்டகால சட்டப்படி ஒருவரின் கணவர்/மனைவி அல்லது பிள்ளைகள் வேறு […]

FIFA 2014 கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்

FIFA 2014 கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (வியாழன்) பிரேசில் நாட்டின் Sao Paulo நகரில் ஆரம்பமாகிறது. முதல் தினத்தில் போட்டியை நடாத்தும் பிரேசிலுக்கும் குரோசியாவுக்கும் இடையில் போட்டி நடைபெறும். மொத்தம் 31 நாடுகள் 2014 போட்டிகளில் பங்குகொள்கின்றன. ஆசிய-பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பங்குகொள்கின்றன. பிரேசில் நாட்டின் பலரும் அங்கு FIFA 2014 நடைபெறுவதை விரும்பி இருந்தாலும், சிலர் இதற்காக பெருமளவு பணம் செலவழிப்பதை வெறுத்து வீதி […]

ரஷ்யாவுக்கான பிரான்ஸின் யுத்தக்கப்பல் விற்பனை, அமெரிக்கா அதிருப்தி

Ukraine முரண்பாடுகள் ஆரம்பமாகுமுன், 2011 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அரசு ரஷ்யாவுக்கு இரு பாரிய Mistral வகை யுத்த கப்பல்களை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த இரு கப்பல்களினதும் மொத்த பெறுமதி $1.66 பில்லியன். அத்துடன் மேலும் இரு கப்பல்களையும் ரஷ்யா கொள்வனவு செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்கா இவ்வகை நவீன கப்பல்கள் ரஷ்யாவிடம் போவதை முதலில் இருந்தே விரும்பி இருந்திருக்கவில்லை. ரஷ்யா கிரைமியாவை தன்வசப்படுத்தியபின் அமெரிக்காவின் எதிர்ப்பு மேலும் பலப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் […]

கராச்சி விமானநிலையம் மீது தாக்குதல், 23 பலி

பாகிஸ்தானின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான கராச்சி விமான (Muhammad Ali Jinnah International Airport) நிலையம் மீது குறைந்தது 10 ஆயுததாரிகள் தாக்கியதில் மொத்தம் 23 நபர்கள் வரை பலியாகியுள்ளனர். மேலும் 23 நபர்கள் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி ஞாயிறு இரவு 11:00 மணியளவில் ஆரம்பித்திருந்துள்ளது. உடனடியாக விமான சேவைகள் திசை திருப்பப்பட்டன. சுமார் 5 மணித்தியாலங்களில் படையினர் 10 தாக்குதல்காரர்களை கொலை செய்து நிலைமையை கட்டுப்பாட்டுள் கொண்டுவந்துள்ளனர். ஞாயிரு […]

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Hillary?

  Hillary Clinton, முன்னாள் ஜனாதிபதி Bill Clinton இனது மனைவி, தற்போது சுயசரிதை வகையிலான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான CBS இனது கிளை நிறுவனமான Simon & Schuster அடுத்த வியாழக்கிழமை வெளியிடுகிறது. Hard Choices என்று தலைப்பிட்டுள்ள இந்த புத்தகத்தில் Hillary பல விடயங்களை விபரித்துள்ளார். தான் Bush இன் ஈராக் மீதான தாக்குதலை ஆதரித்தது தவறு என்றுள்ளார். சிரியாவின் விவகாரம் “wicked problem” (இலாப-நட்டம் நிறைந்த, […]