எகிப்தும், UAEயும் லிபியாவில் விமான தாக்குதல்

நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளை தமது சர்வாதிகார கைப்பொம்மைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன மேற்கு நாடுகள். அதற்கு ஆபத்து வந்தது ருநீசியாவில் (Tunisia) ஆரம்பித்த Arab Spring என்றழைக்கப்படும் அரசியல் சீர்திருத்ததுக்கான புரட்சி. தாம் இழந்த ஆளுமையை மீண்டும் நிறுவ செயல்பட்டன மேற்குலகும், இஸ்ரவேலும். முதலில் எகிப்தில் கைப்பொம்மை சர்வாதிகாரி ஒருவர் அமர்த்தப்பட்டார். இவரின் முதல் வேலை இஸ்ரவேலின் பாதுகாப்பதே. . லிபியாவில் இருந்த மேற்கின் கைப்பொம்மையாக இருக்க மறுத்த கடாபியும் இஸ்லாமிய புரட்சியாளர் உதவியுடன் […]

$17 பில்லியன் தண்டம் செலுத்தும் Bank of America

அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of Americaவும் அமெரிக்காவின் Department of Justice உம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Bank of America மொத்தம் $17 பில்லியனை குற்றப்பணமாக செலுத்த முன்வந்துள்ளது. இதை Justice Department இன்று வியாழன் அறிவித்துள்ளது. . 2008 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னணி காரணங்களில் ஒன்றான வீட்டு கடன் கொடுப்பனவுகளில் நடந்துகொண்ட தவறான செயல்பாடுகளுக்கே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்த வங்கிகள் கடனை திருப்பி […]

அமெரிக்க-இந்தியரின் 4வது வங்கியும் ஆபத்தில்

  ஆதி காலங்களில் அமெரிக்கா வந்த இந்தியர்கள் சிறுது சிறுதாக சேமித்து, படிப்படியாக பொருளாதரத்தில் வளர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியாவின் பட்டேல்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் பல வணிகத்துறைகளில் வேரூன்றி நின்றவர்கள். Motel துறை இவர்கள் வேரூன்றிய முன்னணி வணிகங்களில் ஒன்று. சிலர் அதற்கும் மேலாக சென்று பிராந்திய அளவிலான வங்கிகளையும் ஆரம்பித்திருந்தனர். அனால் அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. . கடந்த மாதம் United States Department of Treasury இந்தியர்களால் […]

இரணையில் ஒன்றை கைவிட்ட பெற்றார்

ஆஸ்திரேலிய நாட்டின் தம்பதியினர், மனைவியின் உடல்நல குறைபாடு காரணமாக தமக்கு குழந்தை பிறக்காது என்பதால் Pattramon Chanbua என்ற தாய்லாந்து பெண் ஒருவரை 10,000 euro கொடுத்து surrogate தாயாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். பணம் கொடுத்து இவ்வகையில் surrogate தாய் எடுப்பது ஆஸ்திரேலியாவில் குற்றம். அதனாலேயே இவர்கள் தாய்லாந்து போன்ற இடங்களில் அவ்வகை வாடகை தாயை பிறப்பு வரை வாடகைக்கு அமர்த்துவர். . இந்த தம்பதியினரின் கருக்கட்டல் இரணை பிள்ளைகளை தாய்லாந்து வாடகை தாய்க்கு கொடுத்தது. […]