சவுதி அணி கட்டாருடன் உறவுகளை துண்டிப்பு

சவுதி அரேபியா தலைமையில் சில இஸ்லாமிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்து உள்ளன. இன்று திங்கள் சவுதி, UAE, எகிப்து, ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்தன. அதை தொடர்ந்து யேமென் (Yemen), லிபியா, மாலைதீவு ஆகினாவும் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்தன. . சவுதி கட்டாருடனான தனது எல்லைகளை மூடி, விமான மற்றும் கடல் பயணங்களை நிறுத்தி உள்ளது. எகிப்து கட்டார் தூதுவரை 48 மணித்தியாத்துள் வெளியேறுமாறு பணித்துள்ளது. அத்துடன் தனது தூதுவரையும் திருப்பி அழைத்துள்ளது. . […]

லண்டனில் வாகனத்தால் தாக்குதல், 6 பேர் பலி

லண்டன் மாநகரில் உள்ள லண்டன் பாலம் (London Bridge) அருகே இன்று சனி மாலை 9:00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெற்றும் வருகின்றனர். தாக்குதல்காரர் என்று கருதப்படும் 3 பேர் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டும் உள்ளனர். . லண்டன் பாலம் வழியே சென்ற வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மக்கள் நடைபாதை நோக்கு சென்று இந்த கொலைகளை செய்துள்ளது. […]

டிரம்ப் ஆட்சியில் சீன-ஐரோப்பிய உறவு வளர்ச்சி

தன்னிச்சையாக டிரம்ப் அரசு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை நடைமுறைப்படுத்த, வெறுப்படைந்த ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் சீனாவின் நெருக்கத்தை நாட ஆரம்பித்துள்ளன. நேற்று ஜுன் முதலாம் திகதி டிரம்ப் அரசு சூழல் மாசடைவதை தடுக்கும் பொருட்டு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Paris Accord என்ற இணக்கத்தில் இருந்து வெளியேறியது ஐரோப்பாவை மேலும் சீனா நோக்கி தள்ளியுள்ளது. . அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் Paris Accord என்ற வளிமண்டலத்துக்கு பாதகமான (greenhouse gas […]

இந்தியாவில் இறைச்சி மாட்டுக்கு தடை, மாநிலங்கள் எதிர்ப்பு

ஆட்சியில் உள்ள இந்துவாத இந்திய மத்திய அரசு கடந்த கிழமை இறைச்சிக்கு மாடுகள், எருமைகள், மற்றும் சில மிருகங்களை விற்பனை செய்தலையும், கொள்வனவு செய்தலையும் சட்டப்படி தடை செய்திருந்தது. ஆனால் சில மாநிலங்கள், குறிப்பாக இறைச்சி மாட்டு வர்த்தகத்தில் உள்ள மாநிலங்கள், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. . தமிழ்நாட்டில் உள்ள Madras High Court இந்த மத்திய அரசு சட்டத்தை 4 கிழமைகளுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த சட்டத்தின் நியாயத்தை ஆராய இந்த 4 […]