2018 FIFA கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

FIFA2018

பிரான்ஸ் (France) மற்றும் குரோசியா (Croatia) ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஞாயிரு இடம்பெற்ற 2018 FIFA உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றுள்ளது (பிரான்ஸ்: 4, குரோசியா: 2).
.
பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டிலும் FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அத்துடன் 2006 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தையும், 1958 ஆம் மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் 3ஆம் இடத்தையும் பிரான்ஸ் வென்றிருந்தது. அதேவேளை 2010 ஆம் ஆண்டில் பிரான்ஸ் 29 ஆம் இடத்தில் இருந்துள்ளது.
.
குரோசியா 1998 ஆம் ஆண்டில் 3ஆம் இடத்தை வென்றிருந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டில் 23 ஆம் இடத்தில் இருந்துள்ளது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குரோசியா யூகோசிலாவிய நாட்டின் அங்கமாக இருந்தது.
.
முதலாம் இடத்தை அடைந்த பிரான்சுக்கு $38 மில்லியன் பரிசை FIFA வழங்கும். இரண்டாம் இடத்தை அடைந்த குரோசியா $28 மில்லியன் பரிசை அடையும். நேற்றைய ஆட்டத்தில் வென்று 3 ஆம் இடத்தை அடைந்த பெல்ஜியம் $24 மில்லியன் பரிசை பெறும். நேற்று 4 ஆம் இடத்தை அடைந்த பிரித்தானியாவுக்கு $22 மில்லியன் கிடைக்கும். இந்த வருடம் FIFA சுமார் $400 மில்லியனை பரிசாக வழங்க உள்ளது.
.
அடுத்த FIFA உலக கிண்ண போட்டிகள் 2022 ஆம் ஆண்டு கட்டாரில் (Qatar) இடம்பெறும்.

.