சீனாவில் Vatican, சீன முறைப்படி

இத்தாலியின் Rome நகருள் உள்ள Vatican உலக Roman கத்தோலிக்கத்தின் தலைமையகம். பல நூறு வருடங்களாக உலகம் எங்கும் புகுந்து ஆளுமை செய்த Vatican சீனாவுள் மட்டும் இதுவரை நுழைந்து ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை. ஆனால் வேறுவழி எதுவும் இன்றி தற்போது Vatican சீனாவின் கொள்கைகளுக்கு இணங்கி, சீனாவின் அரசின் ஆதரவை பெற்று, சீனாவுள் சட்டப்படி நுழைகிறது. . முதலில் சீனாவின் Emperorகள், அந்நிய நாட்டில் தலைமையகத்தை கொண்ட கத்தோலிக்க தலைமை தம் நாட்டுள் ஆதிக்கம் செய்ய […]

அமெரிக்க பாடசாலையில் சூடு, 17 பேர் பலி

அமெரிக்காவின் Florida மாநிலத்து Parkland என்ற இடத்தில் உள்ள Marjory Stoneman Douglas High என்ற பாடசாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 17 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். . துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய 19 வயதுடைய Nicolas Cruz என்பவர் கைது செய்யப்பட்டும் உள்ளார். இவரிடம் இருந்து ஒரு AR-15 வகை ஆயுதமும் கைப்பற்றப்படுள்ளது. இச்சம்பவம் இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 2:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. Nicolas Cruz இந்த […]

மாலைதீவு குழப்பம், இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

தற்போது உள்நாட்டு அரசியல் குழப்பத்துள் உள்ள மாலைதீவுக்கு இந்தியா தனது இராணுவத்தை அனுப்பினால், சீனாவும் உடனடியாக தலையிடும் என்று கூறியுள்ளது சீனாவின் அரச கட்டுப்பாட்டில் உள்ள Global Time என்ற பத்திரிகை. . சீனா மாலைதீவின் உள்நாட்டு அரசியலில் காரணம் இல்லாதவிடத்து தலையிடாது என்றும், ஆனால் ஐ.நா.வின் அனுமதி இன்றி இந்திய இராணுவம் தலையிட்டால், சீனா பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த கட்டுரை கூறியுள்ளது. . தற்போது மாலைதீவின் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி Abdulla Yameen […]

யுத்த விமானத்தை இழந்த இஸ்ரவேல் ஈரான் மீது பாய்ச்சல்

சனிக்கிழமை இஸ்ரவேல் வான்படைக்கு சொந்தமான நவீன வகை F-16 யுத்த விமானம் ஒன்று சிரியாவின் எல்லை பகுதில் விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது. பெரும்பாலும் இந்த தாக்குதல் ஈரானின் உதவியுடனேயே இடம்பெற்று இருக்கலாம் என்று கருதும் இஸ்ரவேல், ஈரான் மீது கண்டன கருத்துக்களை வெளியிட்டு உள்ளது. . கடந்த 36 வருடங்களின் பின் இவ்வாறு இஸ்ரவேலில் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டது இதுவே முதல் தடவை. இவ்விடயம் இதுவரை இருந்த இஸ்ரவேலின் வான்பரப்பு […]

ரஷ்ய விமானம் வீழ்ந்தது, 71 பேர் பலி

இன்று ஞாயிரு ரஷ்யாவின் தலைநகர் மஸ்காவிலிருந்து (Moscow) கிழக்கே, Kazakhstan எல்லையில் உள்ள Orsk என்ற நகரம் சென்ற பயணிகள் விமானம் வானேறி சில நிமிடங்களுள் வீழ்ந்துள்ளது. இதில் பயணித்த 65 பயணிகளும், 6 பணியாளர்களும் பலியாகி உள்ளனர். . இன்று வீழ்ந்த Antonov148 வகை பயணிகள் விமானம் ரஷ்யாவின் Saratov விமானசேவைக்கு உரியது. . இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாவிட்டாலும், இந்த விமானத்தின் விமானி விமானம் கோளாறில் உள்ளதை அறிவித்து, அவசரகால தரை இறங்களுக்கு […]

தென்கொரியாவை அழைக்கிறது வடகொரியா

தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in னை வடகொரியாவுக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வடகொரியாவின் விசேட ஒலிம்பிக் உறுப்பினர்கள், தென்கொரிய ஜனாதிபதியுடன் சனிக்கிழமை கொண்டிருந்த மத்திய உணவு ஒன்றின் பின்னரேயே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. . மேற்கூறிய சந்திப்பின் போது Kim Yo Jong, வடகொரியாவின் தலைவரின் இளைய சகோதரி, வடகொரிய தலைவர் எழுதிய கடிதம் ஒன்றை தென்கொரிய ஜனாதிபதியிடம் (Moon) வழங்கியதாக கூறப்படுகிறது. . அத்துடன் Kim Yo Jong […]

ஒலிம்பிக்கில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு

தென்கொரியாவில் இன்று வெள்ளி இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆரம்ப விழாவின்போது வடகொரியாவுக்கு முக்கியத்துவம் வழங்குவதை தடுக்க அமெரிக்கா எடுத்த பெரும் முயற்சிகளையும் மீறி  தென்கொரியா வடகொரியாவை உபசரித்து உள்ளது. . ஆரம்ப விழாவின் போது வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் இணைந்து ஒரு கொடியின்கீழ் அணிவகித்து உள்ளனர். இந்த விசேட கொடி வெள்ளை பின்னணியில், நீல நிறத்தில் இணைந்த கொரிய வரைபடத்தை கொண்டிருந்தது. . வடகொரியாவின் தலைவர் Kim […]

ஜப்பானில் பாடசாலை சீருடை விலை $730

ஜப்பானின் Tokyo நகரின் உள்ள Ginza பகுதி ஆரம்ப பாடசாலை (elementary school) ஒன்று அண்மையில் தமது பாடசாலை சிறுவர்களுக்கு புதிய சீருடை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சீருடை வடிவமைப்புக்கு பாடசாலை உலகின் luxury ஆடை தயாரிப்பு நிறுவனமான இத்தாலிய ஆர்மானி (Armani) நிறுவனத்தை நாடி இருந்தனர். . ஆர்மானி தயாரித்த சீருடை ஒன்றின் விலை சுமார் 80,000 ஜப்பானிய யென் ($730). இந்த அதீத விளையால் விசனம் கொண்டுள்ளனர் பெற்றார். . Taimei Elementary என்ற […]

முன்னாள் பங்களாதேச பிரதமருக்கு 5 வருடங்கள்

முன்னாள் பங்களாதேச பிரதமர் Khaleda Zia என்பவருக்கு இன்று வியாழன் 5-வருட சிறை தண்டனை வழங்கப்டுள்ளது. தனது ஆட்சி காலத்தில் $252,200 பெறுமதியான பணத்தை Zia Orphanage Trust என்ற சேவையில் இருந்து தனது சொந்த வங்கி  கணக்குக்கு மாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவருக்கு 5-வருட சிறை கிடைத்துள்ளது. . சிறை தண்டனையை வழங்கிய நீதிபதி Mohammad Akhteruzzaman முன்னாள் பிரதமர் வயது முதிர்ந்தவர் என்றபடியாலும், ஒரு முன்னாள் பிரதமர் என்றபடியாலும், குறைந்த […]

மாலைதீவுள் மீண்டும் அரசியல் குழப்பம்

மாலைதீவு அரசியல் மீண்டும் குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளி முதல் குழப்பம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலத்தீவு உயர் நீதிமன்றம் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விடுதலை செய்யும்படி அரசிடம் கூறி இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த அரசு உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை கைது செய்து, நாட்டில் 15-நாள் அவசரகால நிலையையும் நடைமுறை செய்துள்ளது. . மேற்கு நாடுகள் மாலைதீவு அரசின் செயலை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு […]