இந்தியாவுக்கு ரஷ்ய S-400, அமெரிக்கா தடைவிதிக்குமா?

ரஷ்யாவின் S-400 வகை விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் ஐந்தை இந்தியா கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. சுமார் $6 பில்லியன் பெறுமதியான இந்த கொள்வனவு அமெரிக்காவின் ரஷ்யா மீதான தடைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. . இந்தியாவின் இந்த ஏவுகணை கொள்வனவு அமெரிக்காவின் Countering America’s  Adversaries Through Sanctions Act (CAATSA Section 231) என்ற சட்டத்துக்கு முரணானது. இந்த சட்டப்படி அமெரிக்கா இந்தியாவை தடைகள் மூலம் தண்டிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா அதை […]

சிரியாவின் ஒருமைக்கு ரஷ்யா, ஈரான், துருக்கி ஆதரவு

சிரியாவின் ஒருமைபாடு சிதைந்து, அந்நாடு பல துண்டங்களாக உடையாமல் இருப்பதை உறுதி செய்ய தாம் ஆவண செய்யவுள்ளதாக ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இன்று கூறி உள்ளன. துருக்கியின் அன்கரா (Ankara) நகரில், அந்நாடு ஜனாதிபதி Erdogan மற்றும் அங்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி Putin, ஈரானிய ஜனாதிபதி Rouhani ஆகியோர் இந்த இணக்கத்தை அறிவித்து உள்ளனர். . ரஷ்யாவும், ஈரானும் இதுவரைக்காலம் சிரியாவின் ஜனாதிபதி al-Assad க்கு ஆதரவு வழங்கி வந்திருந்தாலும், […]

GSAT-6A செய்மதி தொடர்பை இழந்தது இந்தியா

இந்தியா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி GSAT-6A என்ற நவீன செய்மதியை ஏவி இருந்தது. ஆனால் அந்த செய்மதியுடனான தொடர்புகளை மறுநாள் 30 ஆம் திகதி முதல் முற்றாக இழந்துள்ளது இந்திய ISRO. (Indian Space Research Organization). இந்த செய்தியை ISRO தற்போது உறுதி செய்துள்ளது. . இந்த செய்மதியை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ISRO தன்னால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவற்றை அம்முயற்சிகள் எந்த பலனையும் வழங்கவில்லை. . […]

எகிப்தின் சர்வாதிகாரி சிசிக்கு ரம்ப் வாழ்த்து

கடந்த கிழமை எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தல் போட்டியிட்டோரில் ஒருவர் தற்போதை ஜனாதிபதி சிசி (Sissi). சிசி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பு மூலம் சிறையில் அடைத்து பதவிக்கு வந்தவர். . இம்முறை தேர்தலிலும் தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய லெப். ஜெனரல் Sami Anan, கேணல் AhmedKonsowa ஆகிய வேட்பாளர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை மட்டும் தன்னுடன் போட்டியிட நிறுத்தியிருந்தார். . […]

அமெரிக்க விசாவுக்கு Facebook, Twitter விபரம்

அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் அந்நிய நாட்டவரிடம் அவர்களின் விண்ணப்பத்தில் Facebook, Twitter போன்ற 20 social media விபரங்களையும் (username) கேட்க முனைகிறது ரம்ப் அரசு. கடந்த 5 வருட இவ்வகை social media விபரங்களை (username) குறிப்பிடுமாறு கேட்கப்படலாம். . இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரின், தற்கால தரவுகளின்படி, சுமார் 710,000 குடிவரவு விசா (immigrant visa) விண்ணப்பங்களும், சுமார் 14 மில்லியன் உல்லாச பயணிகளின் விண்ணப்பங்களும் social median விபரங்களை […]