ஆறு மாதங்களின் பின் ரம்ப்-சீ ஜின்பிங் தொடர்பு

ஆறு மாதங்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளனர். . சீனா மீது தடைகளை விதித்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்து ஒரு வர்த்தக யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார் ரம்ப். சீனா வேறுவழி இன்றி தனது கூற்றுப்படி செயல்படும் என்று கருதியும் இருந்தார் அவர். . ஆனால் சீனா பதிலுக்கு தானும் புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க […]

மலாவியில் காந்தி சிலைக்கு எதிர்ப்பு

ஆபிரிக்க நாடான மலாவியில் (Malawi) நிறுவப்படும் காந்தி சிலைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அந்நாட்டு குழு ஒன்று (Gandhi Must Fall) கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்விடத்து நீதிமன்றம் சிலைக்கான கட்டுமான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. . சுமார் $10 மில்லியன் செலவில் மாநாட்டு மண்டபம் உட்பட ஒரு தொகுதி கட்டிடங்களை மலாவியின் Blantyre என்ற நகரில் கட்ட இந்தியா இணங்கி இருந்தது. இவ்விடத்தில் ஒரு காந்தி சிலையையும் நிர்மாணிக்க இந்திய நடவடிக்கைகள் எடுத்திருந்தது. . ஆனால் […]