மேயின் Brexit திட்டம் தோல்வி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே (Theresa May) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முன்வைத்த திட்டம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த திட்டத்துக்கு ஆதரவாக 202 வாக்குகளும், எதிராக 432 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் மேயின் அரசியல் தலைமையும் ஆபத்து நிலையில் உள்ளது. . மேயின் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தோருள் மே அணியை சார்ந்த 118 பேரும் அடங்குவர். . இந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் […]

Zoellick: சீனாவை கட்டுப்படுத்த முடியாது

அமெரிக்கா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் World Bank தலைவரும், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான முன்னாள் பிரதிநிதியுமான Robert Zoellick. . சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்வதை தடுக்க அமெரிக்கா பல முனைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் ஐரோப்பிய மற்றும் நடப்பு நாடுகளை சீனாவின் 5G நவீன தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுள்ளது அமெரிக்கா. . அத்துடன் அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான தற்போதை […]

​ரம்ப் மீது FBI விசாரணை?

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் மீது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான FBI விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சில அமெரிக்க பத்திரிகைகள் கூறுகின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராகவும், எதிரி நாடான ரஷ்யாவின் நலனுக்கு ஆதரவாகவும் ரம்ப் செயல்பட்டுள்ளார் என்று கூறியே இந்த விசாரணை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. . கடந்த வெள்ளிக்கிழமை ​The New York Times பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. பின்னர் Washington Post பத்திரிகையும் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. . இது தொடர்பாக […]

அமெரிக்காவில் அதி நீண்ட அரச சேவை முடக்கம்

அமெரிக்காவில் தற்போது மத்திய அரச சேவைகளின் ஒரு பகுதி முடக்கத்தில் உள்ளது. ரம்ப் தனது விருப்பப்படி மெக்ஸிகோ எல்லையோரம் வேலி அமைக்க அமெரிக்க காங்கிரஸிடம் பணம் கேட்டிருந்தார். காங்கிரஸ் தேவையான பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக ரம்ப் வரவுசெலவு திட்டங்களில் கையொப்பமிட மறுத்ததனாலேயே இந்த பகுதி முடக்கம் இடம்பெறுகிறது. . ஜனாதிபதி தேர்தலின் போது தான் மெக்ஸிகோ எல்லையோரம் வேலி போடுவேன் என்றும், அதற்கு மெக்ஸிகோவே பணம் செலுத்தும் என்று ரம்ப் கூறியிருந்தார். ஆனால் மெக்ஸிகோ வேலிக்கு […]

உலகின் முதலாவது பணக்காரனின் விவாகரத்து

Amazon என்ற Internet மூலமான விற்பனை நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos என்பவரின் திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இவரே தற்போது உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $137 பில்லியன் ($137,000,000,000) என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. . தற்போது 54 வயதான இவர் 25 வருடங்களுக்கு முன் MacKenzie Tuttle என்பவரை திருமணம் செய்திருந்தார். 1994 ஆம் ஆண்டில் இவர் ஆரம்பித்த Amazon நிறுவனத்தில் இவரின் மனைவி முதலில் கணக்காளர் ஆக […]

சீன கலம் அனுப்பும் சந்திரனின் மறுபக்க படங்கள்

சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக இறங்கியதுடன், அங்கிருந்து படங்களை அனுப்பவும் ஆரம்பித்துள்ளது. சந்திரனின் மறுபக்கத்தில் மனித கலம் தரை இறங்குவது இதுவே முதல் தடவை. . சந்திரனின் மறுபக்கம் எப்போதும் பூமியின் பார்வைக்கு அப்பால் இருப்பதால், அங்கிருந்து பூமியில் உள்ள தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை என்பதாலேயே சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்குவது இதுவரை தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த குறைபாட்டை தவிர்க்க சீனா ஒரு செய்மதியை சந்திரனுக்கு அப்பால், 65,000 km […]

உலகவங்கி தலைவர் திடீர் பதவி விலகல்

உலகவங்கியின் தலைவர் Jim Yong-kim இன்று திங்கள் தீடீரென தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இவர் தான் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக காரணம் கூறி இருந்தாலும், உண்மை வேறாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . இவரின் பதவி காலம் 2022 ஆம் ஆண்டிலேயே முடிய உள்ள நிலையில், இந்த திடீர் பதவி விலகலுக்கு அமெரிக்க அரசில் நிலவரங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொரியர் வழி வந்த அமெரிக்கரான Jim Yong-kim முன்னாள் […]

சீன பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி

2018 ஆம் ஆண்டுக்கான சீனாவின் பிறப்பு வீதம் பெரும் வீழ்ச்சியை கொண்டிருக்கும் என்று சீனாவின் Global Times பத்திரிகை கூறுகிறது. ஆனால் ஒரு பிள்ளை மட்டும் என்ற கொள்கையை 2016 ஆம் ஆண்டில் நீக்கிய சீன அரசு, அதிகரித்த பிறப்பு வீதத்தை எதிர்பார்த்து இருந்தது. . 2018 ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் மொத்த தொகை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சில முக்கிய நகர மற்றும் மாகாண பிறப்பு தொகைகள் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி […]

இலங்கையில் புதுவருடம் முதல் Plug G

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் type G வகை 13-amp மின் plugs மற்றும் sockets வகைகள் மட்டுமே சட்டப்படியானதாக இருக்கும். இதுவரை பாவனையில் இருந்துவந்த உருளை (round) pin களுக்கு பதிலாக புதிய plugs மற்றும் sockets செவ்வக (rectangle) pin களை கொண்டிருக்கும். . முதலாம் திகதி முதல் type G வகை plugs மற்றும் sockets மட்டுமே சட்டப்படி விற்பனை செய்ய முடியும். அதுமட்டுமன்றி கடைகளில் […]