அரசர் தடுத்தார் இளவரசி அரசியலை

நேற்று தாய்லாந்தின் முன்னாள் இளவரசி எதிர்கட்சி கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி இருந்தார். இதனால் மிரண்ட இராணுவ சார்பு கட்சி இராணுவ சார்பு அரசரை நாட, அவரும் முன்னாள் இளவரசி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்துள்ளார். இது தொடர்பாக இளவரசி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. . சாதாரண அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்ததால் தாய்லாந்து அரச அதிகாரத்தை இழந்த 67 வயதுடைய முன்னாள் இளவரசி, சாதாரண ஒரு பிரசைக்கு உள்ள உரிமைப்படி தான் தேர்தலில் […]

தாய்லாந்து இளவரசி தேர்தலில் போட்டி

தாய்லாந்தின் இளவரசி வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள அரச தலைமை (constitutional monarchy) முறையில் அரச குடும்பத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவை. இந்த இளவரசியின் சகோதரனே (King Maha Vajiralongkorn) தற்போதைய அரசர் ஆவார். . தாய்லாந்து அரசியல் இராணுவ ஆதரவு தரப்புக்கும், மக்கள் ஆதரவு தரப்புக்கும் இடையில் நீண்ட காலமாக இழுபட்டு வந்துள்ளது. மக்கள் தெரிவு செய்திருந்த […]

மோதி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது?

இந்திய பிரதமர் மோதியின் ஆட்சி காலத்தில் அங்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து உள்ளதாக அண்மையில் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. இந்த உண்மை வரும் மே மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் மோதியை பெரிதும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. . அரச ஆதரவில் இயங்கும் National Statistical Commission தனது கூற்றில், 2017-2018 காலத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை 6.1% என்றும் அது கடந்த 45 வருட காலத்தில் மிக அதிக வேலைவாய்ப்பு இன்மை என்றும் கூறியுள்ளது. . […]

வியட்நாமில் இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) தமது இரண்டாம் சந்திப்பை வியட்நாமில் நிகழ்த்தவுள்ளனர். இந்த மாதம் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் (February 27, 28) இவர்கள் நேரடியாக சந்திக்கவுள்ளனர். சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு எதையும் சாதிக்காத நிலையில் இந்த இரண்டாம் சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் மிக குறைவே. . வடகொரியா பதிலுக்கு எதையும் எதிர்பாராது தனது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ரம்ப எதிர்பார்க்கிறார். […]

பொய்யான அமெரிக்க பல்கலைக்கழகம், 129 கைது

அமெரிக்க அரசு இயக்கிய பொய்யான பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்த 129 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால் விசனம் கொண்டுள்ளது இந்திய அரசு. டில்லியில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டு உள்ளது. . அமெரிக்காவுக்கு உண்மையான மாணவ விசாவில் (student visa) செல்லும் இந்தியர்கள், அங்கு தொடர்ந்து வசிக்க தொடர்ச்சியான படிப்பை பயன்படுத்துவது உண்டு. ஆனால் விசா பெற பயன்படுத்திய உண்மையான கல்வி நிலையம் போல் தொடர்ச்சியான படிப்புக்கு பயன்படுத்தும் கல்வி நிலையங்கள் இருப்பதில்லை. தொடர்ச்சியான […]