2020 முதல் உலக சேவையில் சீன GPS

BeiDuoGPS

தற்போது உலகின் பிரபல GPS (Global Positioning System) ஆக அமெரிக்காவின் GPS வழிகாட்டி சேவை விளங்குகிறது. ஆனால் தமது BeiDu சேவை அமெரிக்காவின் GPS சேவையுடன் உலக அளவில் போட்டியிடும் என்று BeiDu வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.
.
அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவியுடன் தமது இருப்பிடங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் 1973 ஆம் ஆண்டு GPS திட்டத்தை ஆரம்பித்தது. அமெரிக்க வான்படை 1993 ஆம் ஆண்டில் மொத்தம் 24 செய்மதிகளை பூமியை வலம்வர வைத்து GPS வழிகாட்டியை ஆரம்பித்தது. முதலில் இது இராணுவத்துக்கு மட்டும் பயன்பட்டாலும், பின்னர் பொதுமக்களுக்கும் இந்த சேவை விற்பனை செய்யப்பட்டது.
.
1976 ஆம் ஆண்டில் ரஷ்யாவும் தனது GLONASS என்ற உலக அளவிலான வழிகாட்டி சேவையை ஆரம்பித்தது. ஆனால் GLONASS உலக அளவில் பிரபலம் அடையவில்லை. 2002 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் Galileo என்ற தனது உலக அளவிலான வழிகாட்டி சேவை முயற்சியை ஆரம்பித்தது.
.
2000 ஆம் ஆண்டில் சீனாவும் தனது GPS போன்ற வழிகாட்டி சேவையை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியது. BeiDu என்ற இந்த சேவை அடுத்த வருடம் முதல் வேறு பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. அதற்காக 120 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக BeiDu கூறியுள்ளது.
.
சீனாவில் விற்பனை செய்யப்படும் 70% smart phone கள் BeiDU சேவையையே பயன்படுத்துகின்றன.
.
உலக அளவிலான வழிகாட்டி சேவையை வழங்க சுமார் 18 முதல் 30 செய்மதிகள் தேவை. வழிகாட்டி சேவையை பெறும் கருவி குறைந்தது 4 செய்மதிகளின் நேரடி பார்வையில் இருத்தல் வேண்டும். நெட்டாங்கு, அகலாங்கு, கடல் மடத்தில் இருந்தன உயரம் ஆகிய மூன்று தரவுகளும் GPS மூலமான நிலையத்தை அறிய பயன்படும்.
.
அமெரிக்காவின் GPS தற்போது 31 செய்மதிகளை பயன்பாட்டில் கொண்டுள்ளது. சீனாவின் BeiDu தற்போது 33 செய்மதிகளை கொண்டுள்ளது. அடுத்த வருடம் மேலும் 2 செய்மதிகளை BeiDu அனுப்ப உள்ளது.
.
இந்தியாவும் (NAVIC), ஜப்பானும் (QZSS) உலக அளவில் இன்றி, பிரதேச அளவிலான GPS சேவையை நடைமுறை செய்யவுள்ளன.
.