2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 ஆம் ஆண்டு முதல் சீனாவின் Huawei தனது சொந்த Operation System (OS) ஆனா Harmony OS 2.0 ஐ மட்டும் தனது smart phone களில் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது Huawei அமெரிக்க Google நிறுவனத்தின் Android OS ஐ மட்டுமே தனது smart phone களில் கொண்டுள்ளது.

ரம்ப் அரசு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்கள் Huawei க்கு தொழில்நுட்பங்களை வழங்குவதை தடை செய்திருந்தது. ரம்பின் தப்பு கணக்கு தற்போது Android OS க்கு எதிர்பாராத போட்டி ஒன்றை உருவாக்கி உள்ளது. தற்போது Google நிறுவனத்தின் Android OS உம், Apple நிறுவனத்தின் iOS உம் மட்டுமே உலகில் குறிப்பிடக்கூடிய smart phone OS கள்.

Harmony OS பலமான பின் சீனா Android OS ஐ தேவைப்பட்டால் தடை செய்யவும் முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் குறைந்தது சீனாவுக்குள் Harmony OS க்கு உறுதியான சந்தையை ஏற்படுத்தலாம்.

Huawei தற்போது 490 மில்லியன் பாவனையாளர்களை (active users) கொண்டுள்ளது. இதுவே அதிகூடிய smart phone களை தயாரிக்கும் நிறுவனம். அதனிடம் 96,000 apps உள்ளதுடன், 1.8 மில்லியன் app developers உம் உண்டு. தொன்கொரியாவின் Samsung இரண்டாம் இடத்தில் உள்ளது.

Huawei தற்போது அமெரிக்க நிறுவனமான Qualcomm chip களையே பயன்படுத்துகின்றது. அதற்கும் மாற்றீடாக தனது சொந்த chip தயாரிக்கும் முயற்சியில் Huawei ஈடுபட்டு உள்ளது.

Smart phone களில் chip, OS ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. தற்போது உலகில் ஓரிரு நிறுவனங்களே அவற்றை தயாரிக்கின்றன.