39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்டவர் 76 வயதில் மரணம்

39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்டவர் 76 வயதில் மரணம்

இந்தியாவின் மிசோராம் (Mizoram) மாநிலத்தில் 39 மனைவிகளையும், 84 பிள்ளைகளையும் கொண்ட Ziona Chana என்பவர் 76 வயதில் மரணமாகி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மரணித்த இவருக்கு 33 பேரப்பிள்ளைகளும் உண்டு. இந்த செய்தியை மிசோராம் மாநில முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

Ziona அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ குழு (Christian sect) ஒன்றின் தலைவர். இவர் தனது குடும்பத்துடன் 4-மாடி கட்டிடம் ஒன்றில் வாழ்ந்திருந்தார். Baktawng என்ற கிராமத்தில் உள்ள இந்த மாடியில் 100 அறைகள் உள்ளன.


இவரின் தந்தையே Chana என்ற குழுவை 1942ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தார். தந்தையின் பின் மகன் தலைவர் ஆனார்.

ஆனால் 1956ம் ஆண்டு பிறந்த Winston Blackmore என்ற கனடிய மோர்மன் (Morman) ஒருவருக்கு 27 மனைவிகளும், 150 பிள்ளைகளும் இருந்தனர். அதனால் அவரின் குடும்ப தொகை 178. Blackmore கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Bountiful நகரில் வாழ்ந்தவர்.