$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

அமெரிக்காவின் Tennessee மாநிலத்து 8 வயது border collie வகை நாய் ஒன்று தனது உரிமையாளரிடம் இருந்து, அவரின் மரணத்தின் பின், $5 மில்லியன் சொத்தை பெற்றுள்ளது. இந்த பணம் அந்த நாய்க்குரிய நிதியத்தில் உள்ளது.

Lulu என்ற இந்த நாயின் உரிமையாளர், 84 வயது கொண்ட Bill Dorris என்பவர், அண்மையில் மரணித்து இருந்தார். அவரை பராமரித்த Martha Burton என்பவரே மேற்படி நாயையும் Bill பயணங்களை மேற்கொள்ளும்  காலங்களில் பராமரித்து உள்ளார். அதனால் Lulu வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியத்தில் இருந்து தேவையான பணத்தை பெற்று Martha நாயை பராமரிக்க முடியும்.

Lulu தொடர்ந்தும் Martha வின் பராமரிப்பில் இருப்பதையே Bill விரும்பி உள்ளார். பராமரிப்பு பணிக்காக Martha வும் ஊதியம் பெறுவார்.

இவ்வகை நாய் சராசரியாக 10 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும்.

திருமணம் ஆகாத Bill க்கு பெரியதோர் நிலமும் அந்த மாநிலத்தில் உள்ளது. அதன் உரிமையை நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது.