500 இந்திய ரயில் பெட்டிகளில் கரோனா படுக்கைகள்?

Delhi

இந்தியாவின் தலைநகர் டெல்ஹியில் சுமார் 500 ரயில் பெட்டிகளை 8,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையம் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Amit Shah தெரிவித்து உள்ளார். இவர் மாநில முதலமைச்சர் Arvind Kejriwal உடனும் இது தொடர்பாக உரையாடி உள்ளார்.
.
டெல்ஹியில் மட்டும் தற்போது கரோனா தொற்றுவோர் தொகை நாள் ஒன்றுக்கு 12,000 பேர் ஆல் அதிகரிக்கிறது.  அந்த நகரில் மொத்தம் 9,195 வைத்தியசாலை படுக்கைகளே உள்ளன. அதில் 4,248 மட்டுமே வெற்றிடங்களாக உள்ளன.
.
மாநில முதலமைச்சர் 40 hotel களையும், 77 மண்டபங்களையும் தற்காலிக வைத்தியசாலைகள் ஆக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
.
இந்தியா முழுவதும் 320,922 பேர் கரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டு உள்ளது. உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிகூடிய கரோனா தொற்றியோர் தொகையில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது.
.
ரயில் பெட்டியில் உள்ள நோயாளிகளை தேவைப்படின் தூர இடங்களுக்கு முரண்பாடு எதுவும் இன்றி நகர்த்தவும் முடியும்.
.
அதேவேளை பங்களாதேசத்தில் இருந்து சீனாவின் GuangZhou சென்ற China Southern விமானத்தில் (Flight CZ392) பயணித்த 17 பேருக்கு கரோனா தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் அந்த விமான சேவை 4 கிழமைகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
.
ஜூன் மாதம் 4 ஆம் திகதி முதல் சீனா நடைமுறை செய்த விதிமுறைப்படி ஒரு விமான சேவையில் 5 முதல் 9 வரையான கரோனா தொற்றியோர் பயணித்து இருந்தால், அந்த சேவை ஒரு கிழமைக்கு தடை செய்யப்படும். விமான சேவை ஒன்றில் 10 க்கும் அதிகமான கரோனா தொற்றியோர் இருந்தால் 4 கிழமைகளுக்கு அந்த சேவை தடைப்படும்.
.