Amit Shah: மோதி யாழ்ப்பாணத்தை மறக்கவில்லை

Amit Shah: மோதி யாழ்ப்பாணத்தை மறக்கவில்லை

தமிழ்நாட்டில் தமது காலை ஊன்ற கடுமையாக முனைகிறது இந்திய பிரதமர் மோதியின் பா. ஜ. கட்சி. அதற்கு ஏற்ப காங்கிரஸ் காலத்து இலங்கை தமிழருக்கான உதவிகளை மறைமுகமாக மோதி செய்ததாக கூறியுள்ளார் அமித் சா (Amit Shah). தமிழ்நாட்டில் பரப்புரை செய்யும் இவர் மத்திய அரசின் Home Minister.

சனிக்கிழமை (2020/11/21) சென்னை நகரில் அமித் சா ஆற்றிய உரை ஒன்றின்போது இலங்கைக்கு பயணம் செய்த மோதி யாழ்ப்பாணத்தை மறக்கவில்லை (When Modiji visited Sri Lanka, he didn’t forget Jaffna) என்றுள்ளார் அமித் சா. அத்துடன் மோதி தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார், என்றும் மொத்தம் 50,000 வீடுகள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

உண்மையில் $270 மில்லியன் பெறுமதியான இந்த திட்டம், 2010 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான United Progressive Alliance ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டமே 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோதி காலத்திலும் தொடர்கின்றது.

2017 ஆம் ஆண்டு மோதி அரசு மேலதிகமாக 10,000 வீடுகளை இலங்கை மலையக மக்களுக்கு வழங்க இணங்கி இருந்தது.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தமிழ்நாட்டு மாநில தேர்தலே மத்திய அரசியல்வாதிகளை தமிழ்நாட்டுக்கு வர காரணம்.