8 ஆண்டு சிரியாவின் யுத்தத்துக்கு 370,000 பேர் பலி

Syria

அந்நியர்களால் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிரியாவில் உருவாக்கப்பட்ட யுத்தத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 370,000 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
2011 ஆம் ஆண்டு சவுதி, கட்டார், UAE, அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் அசாத்தை (Bashar al-Assad) பதவியில் இருந்து விலக்கி தமக்கு சாதகமான ஒருவரை பதவியில் அமர்த்த குழப்பத்தை உருவாக்கின. ஆரம்பத்தில் அசாத் பாரிய தோல்விகளை அடைந்து வந்தார். அனால் ரஷ்யாவும், ஈரானும், கூடவே லெபனானின் ஹொஸ்புல்லா இயக்கமும் அசாத்தின் உதவிக்கு வர, எதிர் அணிகள் அழிக்கப்பட்டன. தற்போது அசாத் ஆட்சி தொடர்கிறது.
.
இந்த 8 ஆண்டு யுத்தத்தில் பலியாகிய பொதுமக்களின் தொகை சுமார் 112,000 என்று கூறப்படுகிறது. அதில் 21,000 சிறுவர்களும், 13,000 பெண்களும் அடங்குவர்.
.
பலியாகிய சிரியாவின் அரச படையினர் தொகை 125,000 என்றும் கூறப்படுகிறது.
.
Kurds உட்பட மேற்கு வளர்த்த ஆயுத குழு தரப்பில் 67,000 பேர் பலியாகி உள்ளனர்.
.
கடும்போக்கு ஆயுத குழுவான IS தரப்பில் சுமார் 66,000 பேர் பலியாகி உள்ளனர்.
.
அத்துடன் சுமார் 13 மில்லியன் மக்களும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.
.
அசாத் அரசுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தோர் தற்போது படிப்படியாக தமது உணர்வுகளை மீண்டும் நிலைநாட்ட முனைகின்றனர். UAE மீண்டும் தனது தூதுவரகத்தை சிரியாவின் தலைநகரில் செயல்பட வைத்துள்ளது.

.