85,000 ருவண்டா உடல் எச்சங்கள் 81 பெட்டிகளில்

RwandaBurundi

1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது ருவண்டாவில் (Rwanda) படுகொலை செய்யப்பட்டோரின் 84,437 உடல் எச்சங்கள் இன்று சனிக்கிழமை 81 பெட்டிகளில் முறைப்படி உறவினரால் புதைக்கப்பட்டு உள்ளன.
.
1994 ஆம் ஆண்டு சுமார் 100 நாட்கள் இடம்பெற்ற இன கலவரங்களுக்கு அங்கு சுமார் 800,000 பேர் பலியாகி இருந்தனர். மரணித்தோருள் அதிகமானோர் சிறுபான்மை Tutsi இனத்தை சார்ந்தோரே. இவர்களை பெரும்பான்மையினரான Hutu இனத்தவர் படுகொலை செய்திருந்தனர்.
.
அண்மை காலம்வரை தனியார் வீடுகளில் அமைந்திருந்த குழிகளில் இருந்த சடல எச்சங்களே இன்று முறைப்படி புதைக்கப்பட்டன. 1994 உடல்களை மறைக்கும் பணியை செய்த ஒருவர் அண்மையில் வழங்கிய துப்பு ஒன்றை தொடர்ந்தே 143 குழிகளில் இருந்து இந்த உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன.

.