Air India சேவைக்கு எரிபொருள் வழங்கல் இடைநிறுத்தம்

AirIndia

இந்தியாவின் அரச விமான சேவையான Air India விமான சேவைக்கு தேவையான எரிபொருளை வழங்கும் அரச எரிபொருள் நிறுவனம் (OMC) இன்று 6 விமான நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கலை இடைநிறுத்தம் செய்துள்ளது. ஏற்கனவே செய்துகொண்ட கொள்வனவுகளுக்கு பணம் செலுத்தாமையே காரணம் என்று கூறப்படுகிறது.
.
Kochi, Pune, Patna, Ranchi, Vizag, Mohali ஆகிய விமான நிலையங்களுக்கே எரிபொருள் வழங்கல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த இடைநிறுத்தம் Air India விமான சேவையையே பாதிக்கும். ஏனைய சேவைகள் தொடர்ந்தும் செயல்படும்.
.
கடந்த மாதம் இந்த எரிபொருள் இடைநிறுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும், அரசியல் தலையீடுகள் காரணமாக Air India தொடர்ந்தும் எரிபொருளை பெற்று வந்தது.
.
54,000 கோடி இந்திய ரூபாய்கள் கடனில் உள்ள Air India, எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் 3,500 கோடி கடனில் உள்ளது.

.