Air Show ஆபத்துக்கள்; ஒரு வாரத்தில் 3 விபத்துக்கள், 9 பலி

Hawker

சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழவைக்கும் ஒரு நிகழ்ச்சி Air Show. பொதுவாக அந்தந்த நாட்டின் வான் படையினரால் நடாத்தப்படும் Air Show சுதந்திர தினம் போன்ற நாட்களின் முக்கிய அம்சமாக இருக்கும். விமான பயன்பாட்டின் அதீதங்களை உள்ளடக்கும் இந்நிகழ்வுகள் ஆபத்துக்களையும் கொண்டன. கடந்த ஒரு கிழமையில் மட்டும் 3 Air Show விபத்துக்களில் மொத்தம் 9 உயிர்கள் பலியாகியுள்ளன.
.
கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் நடைபெற்ற Air Show வின்போது இரண்டு parachute வீரர்கள் வானில் மோதியதால் ஒருவர் செயல்பாடு அற்றவராகி விட்டார். Parachute ஐ இயக்க முடியாத நிலையில் இவர் உயரிய காட்டடம் ஒன்றில் மோதி பின் வீதி ஒன்றில் வீழ்ந்தார். படுகாயம் அடைந்த அவர் பின் மரணமானார். இவருடன் விபத்துக்கு உள்ளான மற்றவர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
.
நேற்று, 22 ஆம் திகதி, இங்கிலாந்தின் Brighton என்ற இடத்தில் நடைபெற Air Show வில் பங்குகொண்ட Hawker Hunter என்ற யுத்த விமானம் ஒன்று பெருஞ்சாலை ஒன்றில் வீழ்ந்து மோதியதால் 7 உயிர்கள் பலியாகி உள்ளன.
.

இன்று, 23 ஆம் திகதி, சுவிச்சலர்ந்து நாட்டில் இரண்டு Air Show விமானங்கள் வானத்தில் மோதியதால் ஒரு உயிர் பலியாகி உள்ளது. மூன்று விமானங்கள் சாகத்தில் ஈடுபட்டபோது இரண்டு மோதியுள்ளன.
.