Alcatel-Lucentஐ கொள்வனவு செய்கிறது Nokia

Nokia

பின்லாந்தில் ஆரம்பித்து பின்னர் பிரான்ஸ் உட்பட ஐரோப்பா எங்கும் பரவி வளர்ந்த Nokia என்ற தொழில்நுட்ப நிறுவனம் Alcatel-Lucent என்ற நிறுவனத்துக்கு U$16.6 பில்லியன் வழங்கி கொள்வனவு செய்ய இணங்கியுள்ளது. அவ்வாறு இணைந்த நிறுவனம் 114,000 ஊழியர்களை கொண்டிருக்கும். பணம் கொடுக்காது பங்குகள் கொடுப்பதன் மூலமே இந்த கொள்வனவு இடம்பெறவுள்ளது.
.
இந்த இணைந்த நிறுவனம் சுமார் 35% தொலைதொடர்பு தொழில்நுட்ப சந்தை பங்கை கொண்டு அத்துறையில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கும். இத்துறையில் Ericsson என்ற நிறுவனம் 40% சந்தை பங்கை கொண்டு முதலாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் சீனாவின் Huawei 20% சந்தையுடன் உள்ளது.
.

Nokia தனது cell phone பகுதியை 2014 ஆம் ஆண்டில் Microsoft இக்கு விற்பனை செய்திருந்தது.